
தமிழகத்தில் தற்போதுள்ள பரபரப்பான சூழிநிலையில் இன்று மாலை 3 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
வரும் 14ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டம் மிக முக்கியமாக கருதப்படுகிறது.
இந்த கூட்டத்தில் சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்கட்சிகளை எப்படி எதிர்கொள்வது, மற்ற பிரச்சனைகள் குறித்து விவாதிப்பது மற்றும் ஜி.எஸ்.டி. மசோதா உள்ளிட்ட பிரச்சனைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படலாம் என தெரிகிறது.
அதே நேரத்தில் அமைச்சர்கள் மட்டுமே டி.டி.வி.தினகரனை எதிர்த்து வரும் நிலையில், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து டிடிவி தினகரனை சந்தித்து வருவதால் இப்பிரச்சனை குறித்தும், அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவரது தலைமையில் நடைபெறும் 5 ஆவது கூட்டம் இது.