“மிசா முதல் கோட்டை வரை..” முதல்வர் ஸ்டாலின் - துர்கா திருமண நாள்.! குவியும் வாழ்த்து!

By Raghupati RFirst Published Aug 21, 2022, 12:03 AM IST
Highlights

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நாள் இன்று, இதனையொட்டி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என வரிசையாக வாழ்த்தி வருகின்றனர்.

திமுக இளைஞரணி செயலாளர், மேயர், சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் பொருளாளர், அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் என படிப்படியாக அரசியலில் உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின். அவருடைய கரடுமுரடான ஏற்ற இறக்கங்கள் கொண்ட அரசியல் பயணத்திலும், சொந்த வாழ்விலும் அவருக்கு பக்கபலமாக இருப்பவர் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்.

மேலும் செய்திகளுக்கு..அச்சச்சோ..Google Pay, Phonepe யூஸ் பண்றீங்களா நீங்க ? இனிமே எல்லாமே கட்டணம் தான் !

முதல்வர் ஸ்டாலின் - துர்கா ஆகிய இருவருக்கும் கடந்த 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள உம்மிடி பத்மாவதி திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போதைய திமுக பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான நெடுஞ்செழியன் தலைமையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. அப்போதைய பொருளாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். 

அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ரூதின் அலி நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகள் என்ற மிகப்பெரிய பொறுப்புடன் மிகப் பெரிய குடும்பத்தில் திருமணமாகி வந்த துர்கா ஸ்டாலின் அன்றிலிருந்து இன்று வரை தனது பங்களிப்பை ஸ்டாலினின் குடும்பத்திற்கு செய்து வருகிறார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின் தம்பதி இன்று தங்களது திருமண நாளை கொண்டாடுகின்றனர். 

மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இவர்களுக்கு திமுக தொண்டர்கள், நெட்டிசன்கள் உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினும், மனைவி துர்கா ஸ்டாலினும் இன்று கலைஞர் நினைவிடத்துக்கு சென்று மரியாதையை செலுத்தினர்.அதேபோல கலைஞர் கருணாநிதியின் இல்லமான கோபாலபுர வீட்டுக்கும் சென்றனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..“பிரதமர் மோடி தான் முதலிடம் ! மற்ற பிரதமர்களுக்கு இடமே கிடையாது தெரியுமா !” வெளியான அதிர்ச்சி தகவல் !

click me!