முதல்வரை சந்தித்தது எம்.பி பதவிக்கு தானா ? ஓ.பி ரவீந்திரநாத் சொன்ன அதிர்ச்சி தகவல் !

By Raghupati RFirst Published Aug 20, 2022, 7:41 PM IST
Highlights

சென்னை வானகரத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். 

இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஆகஸ்டு 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்கள் விசாரிக்கபட்டது. பொதுக்குழு குறித்து ஜூன் 23ம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியானதால், தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது. 

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது,  ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஈபிஎஸ் தரப்பு, 2017ம் ஆண்டு நியமனத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாது , என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவி காலாவதியாகிவிட்டதாகவும் கூறியது இரண்டாயிரத்து 432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக, கடிதம் வழங்கியுள்ளதாகவும் ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.

மேலும் செய்திகளுக்கு..அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?

ஜூன் 23ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால்,  பதவிகள் காலாவதியாகிவிடும் என எந்த தீர்மானத்திலும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. மேலும் பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என கூறியது. பிறகு இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, கடந்த பொதுக்குழு சேலத்து என்று தீர்ப்பு வழங்கினார். 

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத். அப்போது, 'சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளோம். அதனால் தான் வரும் காலத்தை கணக்கில் கொண்டு, அனைவரும் ஒன்றிணைய அழைப்பு விடுத்தார். அதேபோல் 1989ல் ஜெயலலிதாவுக்கு எதிராக வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக ஓபிஎஸ் வேலை செய்ததாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். 

மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

அதற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். அன்றைய சூழலில் அதிமுகவின் ஜானகி அணிக்காக ஆதரவாக செயல்பட்டார். அதன்பின்னர் ஜெயலலிதாவுடன் ஆதரவாக நின்றார். அன்று முதல் கடைசி வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தான் இருந்துள்ளார். தொண்டர்களை குழப்ப தான் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு செய்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தற்கு, விசாகா கமிட்டி கூட்டம்தான் காரணம். அன்றைய கூட்டத்தில் அதிமுக சார்பாகவே கலந்துகொண்டேன். 

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பாக செயல்பட்ட பாராட்ட வேண்டும். அப்படிதான் திமுகவை பாராட்டினேன். சாமானியர்களும் அனைத்து பதவிகளுக்கும் வர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் அதிமுக. தொண்டர்களை உயர்ந்தவர்களாக நினைத்தவர் எம்.ஜி.ஆர். அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும் என்பது தான் தொண்டர்களின் எண்ணம். சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் இபிஎஸ் என அனைவரும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும் என்று அனைவருக்கும் நல்லது’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..“அரசு டெண்டரில் முறைகேடு.. எடப்பாடிக்கு எதிரான ஆதாரங்கள் இருக்கு !” அறப்போர் இயக்கம் அதிர்ச்சி தகவல்

click me!