ஒண்டிவீரன் தமிழ்நாட்டிற்கான சுதந்திர போராட்ட வீரர் இல்லை.. ஆவேசமாக பேசிய ஆளுநர் ரவி.

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2022, 4:14 PM IST
Highlights

ஒண்டிவீரன் தமிழ்நாட்டிற்கான  சுதந்திர போராட்ட வீரர் மட்டுமல்ல அவர் இந்தியாவிற்கான வீரர் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புகழாரம் சூட்டியுள்ளார். ஒவ்வொரு முறையும்  திருநெல்வேலிக்கு வரும் போது வீர பூமியாக உணர்கிறேன் என்றும் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

ஒண்டிவீரன் தமிழ்நாட்டிற்கான  சுதந்திர போராட்ட வீரர் மட்டுமல்ல அவர் இந்தியாவிற்கான வீரர் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புகழாரம் சூட்டியுள்ளார். ஒவ்வொரு முறையும்  திருநெல்வேலிக்கு வரும் போது வீர பூமியாக உணர்கிறேன் என்றும் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

நாட்டில் 75வது சுதந்திர தின விழா கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்  தியாகிகளின் புகழை போற்றும் வகையிலான நிகழ்ச்சிகளை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. இந்த வரிசையில்  முதல் முதலில் இந்தியாவில் சுதந்திர போராட்டத்திற்கு குரல் கொடுத்த  தமிழகத்தைச் சேர்ந்த  ஒண்டி வீரனுக்கு தபால்தலையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் முதன்முதலில் குரல் கொடுத்து ஆங்கிலேயர்களை  நடுநடுங்க வைத்தவர் மன்னர் மாவீரன் பூலித்தேவன்.

இதையும் படியுங்கள்: இதையே ஒரு இந்து சேர்ந்திருந்தா சும்மா விட்டுருப்பீங்களா.. திமுக அரசை சீண்டும் கிருஷ்ணசாமி..!

பூலித்தேவனின் தலைமை தளபதியாக இருந்தவர்தான் ஒண்டிவீரன், நேற்று அவரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது, இந்நிலையில் அவருக்கு இன்று தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான நிகழ்ச்சி இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது அதில் தமிழக ஆளுநர் ஒண்டிவீரன் தபால்தலை வெளியிட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, ஒண்டிவீரன் என்பவர்  தமிழகத்திற்கான சுதந்திர போராட்ட வீரர் மட்டுமல்ல, அவர் இந்தியாவுக்கான சுதந்திர போராட்ட வீரர், தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை நினைவுகூர்ந்து பெருமை கொள்கிறது.

இதையும் படியுங்கள்: கணவனை இழந்து தனிமையில் வாடிய தாய்... மாப்பிள்ளை பார்த்து 2வது திருமணம் செய்து வைத்த மகள்.

ஒண்டிவீரனை சுதந்திரப் போராட்ட சரித்திரத்தில் இருந்து நீக்க ஆங்கிலேயர்கள் பெரும் முயற்சி செய்தனர். ஆனால் அவர் மக்கள் மனதில் நிறைந்து விட்டார், எனவே அவரின் சுதந்திரப் போராட்ட சரித்திரத்தில் இருந்து அவரை அவர்களால் நீக்க முடியவில்லை, ஒவ்வொரு முறையும் திருநெல்வேலிக்கு வரும் போது வீரம் மிகுந்த  பூமியாக உணர்கிறேன், வேலூரில் ஆயிரம் வீரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினர், ஆனால் திருநெல்வேலியில் சுதந்திர போராட்ட வீரர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் வீரர்களுக்கு சமமானவர்கள்.

விரைவில் சுதந்திர போராட்ட வீரர்கள் ஒண்டிவீரன் பூலித்தேவன் வேலுநாச்சியார் பாரதியார் வாவு சிதம்பரம் பிள்ளை ஆகியோரின் கனவுகளை நாம் உருவாக்குவோம் நாட்டின் 100 வது சுதந்திர தினத்தின்போது இந்தியா உலகின் தலைவராக இருக்கும் என்றார். இந்த பேச்சை பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகள் திருவுருவம் அடங்கிய வாகனத்தை குடியரசு தினத்தில் அனுமதிக்காமல் மத்திய அரசு புறக்கணித்தது, ஆனால் இப்போது ஆளுநர் ஒண்டி வீரனை புகழ்கிறார் என கிண்டல் செய்துள்ளனர்.  

 

click me!