அரசியலில் தல அஜித்! எரிச்சலில் அமைச்சர் உதயகுமார்! ஆச்சரியப்படும் நக்மா!

First Published Nov 25, 2017, 6:55 PM IST
Highlights
Today hot news about politics


பக்கம் பக்கமாய் செய்திகளை வாசிக்க நேரமில்லாமல் காலில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தாலும், நாட்டில் என்ன நடக்குது! எந்த செல்பிரெட்டி என்ன கருத்து சொல்லியிருக்கார்? என்று தெரிந்து கொள்ள ஏங்கும் உள்ளங்களுக்காக ஏஸியா நெட் தமிழின் இந்த பிரத்யேக பதிவு...

*    சினிமா ஃபைனான்ஸியர் அன்புவிடம் நானும் கடன் வாங்கியிருக்கிறேன். பிரச்னையின்றி வரவு - செலவு வைத்திருக்கிறோம். எனவே ஃபைனான்ஸியர்களை குற்றம் சொல்ல முடியாது.
-    நடிகர் சரத்குமார்.

*    தினகரனோடு இணைந்து நிற்கும் சொற்ப அளவிலான தொண்டர்கள் அ.தி.மு.க.வின் பக்கம் வந்தால் அவர்களை அன்பாய் வரவேற்போம்.
-    ஒரத்தநாடு வைத்திலிங்கம் எம்.பி. 

*    நடுநிலையாக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையம், மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் அமைப்பாய் மாறிவிட்டது.
-    தினகரன். 

*    அ.தி.மு.க. தலைமையிடம் முடிவெடுத்தால் நான் மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன். ஆனாலும் ஆட்சி மன்ற குழுதான் இறுதி முடிவை எடுக்கும்.
-    அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன்.

*    விஜய் ஆண்டனிக்கு இன்று நல்லவராய் தெரியும் அன்புச்செழியன் ஆறு மாதங்களுக்கு முன் சசிக்குமாருக்கும் நல்லவராகவே தெரிந்தார். அன்புவிடம் சிக்கிக் கொள்ளாதவாறு விஜய் ஆண்டனியின் அதிர்ஷ்டம் தொடர வாழ்த்துக்கள்.
-    இயக்குநர் கரு.பழனியப்பன்.

*    இயற்கை பேரிடர் எதுவந்தாலும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது. ஆனால் இது பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். மக்கள் அச்சப்படும் வண்ணம் இவர்கள் பரப்பும் பொய் தகவல்கள் எரிச்சலை தருகிறது.
-    அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.

*    அஜித் அரசியலுக்கு வரமாட்டார். ஆனால் ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சிக்காக ஒரு திட்டத்தை தீட்டி வருகிறார். அவரது நெருங்கிய நண்பர் மூலம் இதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
-    நடிகர் ஆரி. 

*    ராய் லட்சுமி நடைத்திருக்கும் ‘ஜூலி 2’ படம் என்னுடையை கதையை அடிப்படையாக வைத்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அப்படி இருந்தால் படத்தை பார்த்துவிட்டு, சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை நிச்சயம் செய்வேன். 
-     நடிகை நக்மா.

*    அன்புச்செழியன் உண்மையிலேயே மிக நல்லவர். எங்களுக்கு பணம் கொடுத்தார், நாங்களும் சொன்ன நேரத்தில் திருப்பிக் கொடுத்தோம். ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததுமில்லை, எங்களை அவர் என்றுமே துன்புறுத்தியதுமில்லை.
-    நடிகை தேவயானி.

*    அம்மாவின் வீட்டை நாங்கள் கோயிலாக கருதுகிறோம். அந்த வீட்டில் நடந்த ரெய்டுக்கு ஒரே காரணம் சசிகலாதான்.
-    மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். 

click me!