
மதுரையில் நடைபெற்ற விழாவிற்கு ஒபிஎஸ்க்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை எனவும் அதேபோல் பன்னீர் பக்கம் இருந்த மதுரை எம்.பிக்கும், எம்.எல்.ஏவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை எனவும் எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
EPS-OPS அணிகள் ஒன்றாக இணைந்து,தினகரன் அணிக்கு எதிராக மாறி தற்போது இரட்டை இலை சின்னத்தையும் பெற்று அதிமுக என்ற கட்சிக்கு சொந்தம் கொண்டாடும் உரிமையை பெற்றனர்.
முதல்வருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்கும் துணை முதல்வருக்கு கொடுக்கப்படுவதில்லை என ஒபிஎஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்து வருகிறது.
மதுரையில் இன்று நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு,துணை முதல்வர் பன்னீர் செல்வதை அழைக்கவும் இல்லை....அழைப்பிதழில் பன்னீர் செல்வத்தின் பெயரும் இடம் பெறவில்லை.
இதன் காரணமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையில், கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அதிமுக எம்.பி. மைத்ரேயன் திடீரென சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன், மதுரையில் நடைபெற்ற விழாவிற்கு ஒபிஎஸ்க்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை எனவும் அதேபோல் பன்னீர் பக்கம் இருந்த மதுரை எம்.பிக்கும், எம்.எல்.ஏவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் ஒற்றுமையாக இருந்து கட்சியை பாதுகாக்க வேண்டும் எனவும் பன்னீரை அழைக்கவில்லை என்ற ஆதங்கம் தான் தனக்கு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.