இன்று  அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.!! எத்தனை பேர் வருவார்கள் ? பதற்றத்தில் எடப்பாடி தரப்பு !!!

First Published Aug 31, 2017, 6:13 AM IST
Highlights
today admk mla meet with eps



அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று தலைமைச் செயலகத்துக்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ள நிலையில், எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்று  எடப்பாடி தரப்பினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்ததை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து அந்த 19 எம்எல்ஏக்களும் புதுச்சேரியில் உள்ள த்சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் 10 நாட்கள் ஆகியும் இப்பிரச்சனை குறித்து கவர்னர் வித்யா சாகர் ராவ் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், டி.டி.வி.தினகரன், தனது ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு விரைவில் குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று தலைமை செயலகம் வரவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். 

இன்று  காலை 10 மணி முதல் மாவட்ட வாரியாக எம்.எல்.ஏக்களை  முதலமைச்சர், அந்தந்த பகுதி அமைச்சர்களுடன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளோர்.

இன்று எத்தனை எம்எல்ஏக்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என தெரிகிறது.

டி.டி.வி.தினகரன் தரப்பு 21 எம்எல்ஏக்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் இன்று எடப்பாடியை சந்திப்பார்களா ? தற்போதுள்ள அரசை காப்பாற்றுவார்களா ? என்பது விரைவில் தெரியவரும்.

 

 

click me!