
அதிமுக ஆட்சி நீடிக்கும் என சபதம் ஏற்று உறுதியுடன் சொல்வதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி ஆதரவாளர்கள் போர்கொடி தூக்கி ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என ஆளுநர் கைவிரிக்கவே சபாநாயகரிடம் தான் கையேந்த வேண்டும் என்ற சூழ்நிலை டிடிவி தரப்புக்கு வந்துள்ளது.
இதனிடையே சபாநாயகர் தனபால் முதல்வராக வந்தால் எங்களுக்கு சம்மதம் என்று சொன்ன டிடிவி குரூப்புக்கு அவரை வைத்தே நோட்டீஸ் அனுப்ப வைத்தார் எடப்பாடி.
இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர், அதிமுக ஆட்சி நீடிக்கும் என சபதம் ஏற்று உறுதியுடன் சொல்வதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.