MK Stalin : முதலில் லண்டன், அடுத்து அமெரிக்கா பயணம்.. மோடிக்கே டஃப் கொடுக்கும் ஸ்டாலின்.! புது ஸ்கெட்ச்.!

By Raghupati R  |  First Published May 9, 2022, 5:21 PM IST

MK Stalin Foriegn Tour Plan : தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் லண்டன் மற்றும் அமெரிக்கா பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதில் பல்வேறு விதமான சாதனைகளை செய்துள்ளார். அதுவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டிருந்தார். 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சி கடந்த மார்ச் 26, 27 ஆம் தேதிகளில் துபாயில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பாக கைத்தறி மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு அரங்குகள் அமைக்கப்பட்டன. 

Tap to resize

Latest Videos

இக்கண்காட்சியில் பங்கேற்று மூதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தோடு துபாய் சென்றிருந்தார். இதை துபாய் பயணம் தொழில் முதலீடுகளை ஈட்டுவதற்காக சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இவரது துபாய் பயணம் பற்றி பலரும் விமர்சனம் செய்தனர். அதுவும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் உள்ளிட்டோர் விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் மற்றுமொரு வெளிநாட்டு பயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கிறார். 

அதன்படி தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் வெளிநாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபையில் கடந்த மாதம் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'அடுத்தகட்டமாக, 2022 ஆண்டு மே மாதத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்.

ஜெர்மனி நாட்டில் ஹானோவர் நிகழ்விலும், ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள "க்ளோபல் ஆஃப் ஷோர் வின்ட்" (Global Off Shore Wind) நிகழ்விலும்,  ஜூலை மாதத்தில் அமெரிக்க நாட்டிலும், முன்னணி முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார். தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் பதவி ஏற்றபின் இரண்டாவது முறையாக அவர் வெளிநாடு செல்கிறார். 

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தற்போது லண்டன் சென்றுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் லண்டன் பயணத்தின் முன்னோட்டமாகவே அவர் அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. துபாய் பயணத்தின் போது, தனது மனைவி துர்கா ஸ்டாலின், மருமகள், மருமகன், பேரக்குழந்தைகள் என தனது குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டார். இது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் முதல்வரின் லண்டன் மற்றும் அமெரிக்க பயணம் எப்படி இருக்கும் என்று அனைவரிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க : ஆசிரியர்களுக்கு தொந்தரவு தந்தால் டிசி கொடுத்துருவோம்.. மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் !

இதையும் படிங்க : திமுகவுடன் தொடர்பில் இருக்கும் 2 பாஜக MLA-க்கள்.. தூக்கிடலாமா ? பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.பி !

click me!