TN Budget 2022-23: சென்னை வாசிகளுக்கு சூப்பர் நியூஸ்.. மழை வெள்ளத்தை தடுக்க 500 கோடி.. பிடிஆர் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2022, 11:11 AM IST
Highlights

கொரோனா நெருக்கடியில் முதலமைச்சர் ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார், அப்போது கடுமையான நிதி நெருக்கடி மற்றும் தொழில் சுணக்கம் ஏற்பட்டிருந்தது.  ஆனாலும் திருத்தப்பட்ட நிதி பட்ஜெட்டில் பெரிய அளவில்  வரிகள் விதிப்புகள் இடம்பெறவில்லை. 

சென்னை வெள்ளத்தை தடுக்க ஆலோசனை குழு அமைக்கப்பட்டு, வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக இந்த ஆண்டு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். அதேபோல் பேரிடர் வருவதற்கு முன்பாக சீராக கணிக்க வானிலை மையங்களுக்கு கருவிகள் மேம்படுத்தபடுகின்றன என்றும் அதற்காக தனியே 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். 2022-2023 ஆம் ஆண்டுக்கானமுதல் பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இது தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பதவியேற்ற  திமுக அரசு கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன் பிறகு தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட்டில் இதுவாகும்.

கொரோனா நெருக்கடியில் முதலமைச்சர் ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார், அப்போது கடுமையான நிதி நெருக்கடி மற்றும் தொழில் சுணக்கம் ஏற்பட்டிருந்தது.  ஆனாலும் திருத்தப்பட்ட நிதி பட்ஜெட்டில் பெரிய அளவில்  வரிகள் விதிப்புகள் இடம்பெறவில்லை. ஆனால் தற்போது மாநிலம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் வரியை கூட்டுவதற்கான நடவடிக்கை தேவை என நிதியமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டம்தொடங்கியவுடனேயே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தங்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

ஆனால் சபாநாயகர் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்த பிறகு பேசா அனுமதிப்பதாக கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பிடிஆர் தொடர்ந்து பட்ஜெட்டில் வாசித்துவருக்கிறார். இதில் பல்வேறு முக்கியமான அம்சங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அதில் அரசு நிலங்களை நியாயமான குத்தகை விடப்பட வேண்டும் என்பதற்கு விரிவான நில குத்தகை கொள்கை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அதேபோல் அரசின் நிலங்களை பாதுகாக்கவும் அதை பராமரிக்கவும் சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் மழைப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் வெள்ளப்பெருக்கு என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் வெள்ளங்களை தடுக்க ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், வெள்ளத்தடுப்பு பணிக்காக இந்த ஆண்டு முதற் கட்டமாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் அறிவித்தார். பேரிடர் வருவதற்கு முன்பு அதை சீராக கணிக்க வானிலை மையங்களுக்கு கருவிகள் மேம்படுத்தப்படுகின்றன என்றும், அதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் போவதாகவும் அவர் கூறினார். 

தமிழக பட்ஜெட் 2022-23 முழுமையான தகவல்களுக்கு : Tamilnadu Budget 2022-2023 LIVE
 

click me!