TN Budget : பொருளாதாரத்தில் உக்ரைன் போர் தாக்கதை ஏற்படுத்தும்.. பட்ஜெட் உரையில் பிடிஆர் பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2022, 10:39 AM IST
Highlights

இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி பற்றாக்குறை குறைந்துள்ளது என்றும், வரும் நிதி ஆண்டில்  நிதிப்பற்றாக்குறை  4.8 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதமாக குறையும் என தெரிவித்தார். அதேபோல உக்ரைன் மீதான போர் மாநில பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். 

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தெரிவித்துள்ளார். இந்தப் போரை கருத்தில் கொண்டு பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் வரும் நிதியாண்டில் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவும் என்றும் அவர் கூறியுள்ளார். 2022 -23 ஆம் ஆண்டு நிதி ஆண்டின் பட்ஜெட்டை  தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட் கூட்டம்: 

ஆனால் கூட்டம் தொடர்ங்கியது முதலே அதிமுகவினர் தொடர் அமலியில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் கூட்டத்தி பேச வாய்ப்பளிக்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார் ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு வாய்ப்பு வழங்குவதாக சபா நாயகர் கூறினார் இதனால் அதிமுகவினர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறுதி நேரம் பட்ஜெட் வாசிப்பை நிதியமைச்சர் பிடிஆர் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது, எதிர்க் கட்சி வெளிநடப்புக்குப் பின்னர் பிடிஆர் பட்ஜெட்டை தொடர்ந்து வாசித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: TN Budget: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களே உங்க படிப்புக்கு நாங்க கேரண்டி.. தெறிக்கவிட்ட பிடிஆர்.  

 

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் இதுவாகும். 2022-23 ஆம் ஆண்டுக்கான முதல் தமிழக பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. திமுக தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இதில் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. எதிர் கட்சியின் அமளியைத் தொடர்ந்து பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாசித்து வருகிறார்.

கடுமையான கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அப்போது கடுமையான நிதி நெருக்கடி, தொழில் சுணக்கமும் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் கடந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் அறிவிக்கப்பட வில்லை.  ஆனால் இந்த முறை அதில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசின் வருவாயை பெருக்கும் முயற்சியில் இந்த பட்ஜெட் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். எனவே வருவாய் சீர்திருத்தம் இதில் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரேன் போர்- தாக்கம்:

பட்ஜெட் தாக்கல் செய்துவரும் நிதியமைச்சர்:-  இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி பற்றாக்குறை குறைந்துள்ளது என்றும், வரும் நிதி ஆண்டில்  நிதிப்பற்றாக்குறை  4.8 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதமாக குறையும் என தெரிவித்தார். அதேபோல உக்ரைன் மீதான போர் மாநில பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். இதை கருத்தில் கொண்டே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: TN Budget 2022-23: சென்னை வாசிகளுக்கு சூப்பர் நியூஸ்.. மழை வெள்ளத்தை தடுக்க 500 கோடி.. பிடிஆர் அதிரடி.  

சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்ற அவர், சமத்துவத்தை உறுதி செய்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, வேலைவாய்ப்பு உருவாக்குவது, கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டில் பெண்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தலை மையமாகக்கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 

click me!