சட்டமன்ற கூட்டம் தொடங்கிய உடனேயே அதகளம் செய்த அதிமுக.. பட்ஜெட் வாசிப்பை நிறுத்தினார் பிடிஆர்..

Published : Mar 18, 2022, 10:14 AM ISTUpdated : Mar 18, 2022, 10:18 AM IST
சட்டமன்ற கூட்டம் தொடங்கிய உடனேயே அதகளம் செய்த அதிமுக.. பட்ஜெட் வாசிப்பை நிறுத்தினார் பிடிஆர்..

சுருக்கம்

திமுக தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இதில் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.  

பட்ஜெட் கூட்டம் தொடங்கிய உடனேயே அதிமுகவினர் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என அமளியில் ஈடுப்ட்டு வந்த தால் பட்ஜெட் கூட்டத் தொடரில் கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது. பேச வாய்ப்பளிக்காததால்  அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்

2022 -23 ஆம் ஆண்டு நிதி ஆண்டின் பட்ஜெட்  தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்து வருகிறார்.ஆனால் அதிமுகவினர் தொடர் அமலியில் ஈடுபட்டு வருகின்றனர். திட்டமிடப்படி அதிமுக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் இதுவாகும். 2022-23 ஆம் ஆண்டுக்கான முதல் தமிழக பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

திமுக தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இதில் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிய பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாசித்து வருகிறார். கடந்த ஆண்டு பதவியேற்ற மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆகஸ்ட் 13ம் தேதி நிதி  திருத்தி அமைக்கப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன் பிறகு தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்.

அப்போது கடுமையான நிதி நெருக்கடியும் மற்றும் தொழில் சுணக்கமும் ஏற்பட்டிருந்தது. அதேபோல் கடந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் அறிவிக்கப்பட வில்லை.  ஆனால் இந்த முறை அதில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசின் வருவாயை பெருக்கும் முயற்சியில் இந்த பட்ஜெட் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். எனவே வருவாய் சீர்திருத்தம் இதில் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் வாசிக்க தொடங்கிய உடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அதற்கு சபாநாயகர் மறுக்கவே சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்ஜெட் கூட்டம் முடிந்த பிறகு பேச வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!