2024ல் 39 சீட் குறிச்சு வச்சுக்கோங்க ! எதிர்கட்சிகளை அலறவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !

By Raghupati R  |  First Published Nov 9, 2022, 9:16 PM IST

பாஜக மைனாரிட்டிக்கு எதிரான கட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் மணிப்பூரில் கிறிஸ்துவர்களாதான் அதிகம். அவர்கள் பாஜகவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கோவாவிலும் அப்படித்தான் என்று எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அண்ணாமலை.


பாஜக கூட்டத்தில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய அண்ணாமலை,  குஜராத்தில் அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால்தான் என்று எழுதுகிறார்கள்.

இதுவரைக்கும் பாஜக வெற்றி பெற்றதை விட 10 சீட் அதிகமா பாஜக ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  இமாச்சல பிரதேசத்தில் எந்த ஒரு அரசுமே திரும்ப வராது என்று சொல்லுவார்கள். இந்த முறை பாஜக அங்கே வரப்போகுது.   நியூயார்க் டைம்ஸ் இதழில் வேற ஏதோ எழுதுகிறார்கள். அதேபோல தான் வாசிங்டன் போஸ்ட் . இங்கே டிவி ஸ்டூடியோவுல உட்கார்ந்து இவங்க வேற ஏதோ பேசிக்கிட்டு இருக்கிறார்கள்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..மின் கட்டணத்தை 10% குறைத்த தமிழக அரசு.. யாருக்கு, எவ்வளவு தெரியுமா ? முழு விபரம்

பாஜக மைனாரிட்டிக்கு எதிரான கட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் மணிப்பூரில் கிறிஸ்துவர்களாதான் அதிகம். அவர்கள் பாஜகவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கோவாவிலும் அப்படித்தான்.   ஏசி ரூம்ல உட்கார்ந்து என்னத்தை யோசிக்கிறாங்க.  என்னை ஒருவர் கேட்டார். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 25 எம்பிக்கள் வருவார்கள் என்று சொல்றீங்களே ? இது கொஞ்சம் அதிகமா தெரியலையா ? என்று கேட்டார்.

இதையும் படிங்க..நவம்பர் 11.! பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில் - 2024 கூட்டணிக்கு அடித்தளமா.?

"உபியில் பாஜக ஜெயித்தால் கங்கையில் குதித்தி விடுவேன் ... என்று கூறிய ஜர்னலிஸ்ட்...
எந்த ஏஸி ரூம்ல உட்கார்ந்து என்ன யோசிக்கிறார்கள்...".

கள நிலவரம் மாறிவிட்டது, மக்கள் பாஜகவின் ஆளுமையை விரும்புகிறார்கள், தமிழகத்தில் 39தொகுதியிலும் பாஜக வெல்லும்"

-மாநில தலைவர்
திரு. pic.twitter.com/45E5uO7uEI

— BJP Tamilnadu (@BJP4TamilNadu)

நான் அவரிடம் சொன்னேன்.  நான் 39 என்றுதான் சொல்லவேண்டும். ஆனா அதை கேட்க நீங்க இன்னும் தயாராக இல்லை.  காத்து எந்த பக்கம் அடிக்குது என்று கிரவுண்ட்ல நின்னாதான் தெரியும் என்று அதிரடியாக பேசி இருக்கிறார் அண்ணாமலை. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..கமலா ஹாரிஸ் மட்டுமா.! அமெரிக்க இடைத்தேர்தலில் அசத்திய இந்தியர்கள் !! யார் யார் தெரியுமா ?

click me!