நவம்பர் 11.! பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில் - 2024 கூட்டணிக்கு அடித்தளமா.?

By Raghupati R  |  First Published Nov 9, 2022, 4:57 PM IST

மதுரைக்கு நவம்பர் 11ம் தேதி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருகை தரவுள்ளார்.


இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். விழாவுக்கு காந்தி கிராம பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். துணைவேந்தர் குர்மித்சிங் வரவேற்று பேசுகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..10% இட ஒதுக்கீடு.! உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு தேவையா ? சர்ச்சைகளுக்கு காரணம் என்ன ?

பட்டமளிப்பு விழாவுக்காக 11-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் இருந்து மாலை 3 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் அருகே உள்ள அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு இறங்கு தளத்துக்கு மாலை 4 மணியளவில் வந்து இறங்குகிறார்.

மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. என்.எஸ்.ஜி. என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் 3 நாட்கள் விமான நிலைய உள் வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை வருகிறார். அதன்பின்னர் விமானத்தில் புறப்பட்டு விசாகப்பட்டினம் செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..தேர்வில் காப்பி.! கண்டித்த ஆசிரியர்.! 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 10ம் வகுப்பு மாணவன் !

click me!