காங்கிரஸ் கட்சிக்கு ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து வளர்ச்சி பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.
இமாச்சல பிரதேசத்தில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துளளது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்ராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர், ‘காங்க்ரா சக்தி பீடங்களின் பூமி. இது இந்தியாவின் நம்பிக்கை மற்றும் ஆன்மீகம் இருக்கும் ஒரு புனித யாத்திரை. பைஜ்நாத் முதல் கத்கர் வரை, இந்த நிலத்தில், பாபா போலேவின் எல்லையற்ற அருள் எப்போதும் நம் அனைவருடனும் உள்ளது என்று பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.
இதையும் படிங்க..10% இட ஒதுக்கீடு.! உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு தேவையா ? சர்ச்சைகளுக்கு காரணம் என்ன ?
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்குள் எப்போதும் சண்டையை காண முடிகிறது. அதை ராஜஸ்தான் மற்றும் பிற பகுதிகளில் பார்த்து வருகிறோம். காங்கிரஸ் கட்சியின் உறுதியற்ற தன்மை, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு உத்தரவாதமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேசத்தில் நிலையான ஆட்சியை தர முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளது.
மற்ற மாநிலங்களிலிருந்து வளர்ச்சி பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. காங்கிரஸ் தலைவர்கள் ஊழலைப் பற்றி சிந்தித்து திட்டமிடுகிறார்கள். ஆனால் நாங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கிறோம். எதிர்காலம் 5ஜிக்கு சொந்தமானது. இமாச்சலத்தின் இளைஞர்களும், ஹிமாச்சலி மக்களின் வாழ்க்கையும் 5G மூலம் மாற்றப்படும்.
இதையும் படிங்க.பாலிகிராப் சோதனை! ராமஜெயம் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை.. சிக்குவார்களா ?
விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் ஆகியோருக்கு உதவியாக 3,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்க பாஜக வழிவகை செய்து உள்ளது. நல்லாட்சி மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள் கொண்ட மக்களால் பாஜக அடையாளம் காணப்படுகிறது. அதனால்தான் அது மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது’ என்று கூறினார். இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..பள்ளி மாணவியுடன் காதல்.! மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய ஆசிரியர் - ஆச்சர்ய சம்பவம்!