தனியார் மூலம் அரசு பணிக்கு ஆட்கள் நியமனம்.? இறங்கி அடித்த எதிர்கட்சிகள்.! ரத்து செய்து பின் வாங்கிய தமிழக அரசு

By Ajmal KhanFirst Published Nov 9, 2022, 2:53 PM IST
Highlights


அரசுப் பணிகளை எப்படி வெளிமுகமை மூலம் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உறுதி அளித்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

அரசு பணிக்கு பணியாளர் சேர்ப்பு

அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது குறித்து  ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதில் அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள், பதவிகள், பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்ளுதல், 'டி' மற்றும் 'சி' பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புதல், பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமித்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களின் பணிச் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவர்களை காலமுறை ஊதியத்தில் அமர்த்துதல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் திமுக..! திராவிட மாடல் என சொல்வது வெட்கக்கேடானது-ஸ்டாலினை விளாசும் ஓபிஎஸ்

எதிர்கட்சிகள் கண்டனம்

அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு. மனிதவள சீர்திருத்தக் குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் இன்று (09.11.2022) மனு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போட்ட திமுக அரசு.. டிடிவி.தினகரன் விளாசல்..!

வரம்புகள் ரத்து- தமிழக அரசு

அரசு பணியாளர்களின் சங்கங்களின்  கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன். பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்ததோடு. இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

இளைஞர்களின் கனவில் மண்ணை போடும் திமுக.! மவுன சாமியாராக இல்லாமல் நடவடிக்கை எடுத்திடுக- ஸ்டாலினை விளாசும் இபிஎஸ்

click me!