பாஜகவில் சேரப் போகும் முக்கிய தலைகள்.. திமுக எங்கள் எதிரி தான், ஆனால் ? அண்ணாமலை சொன்ன சீக்ரெட் !

By Raghupati RFirst Published Nov 12, 2022, 8:50 PM IST
Highlights

திமுக பாஜகவை எதிரியாக பார்க்கிறார்கள். எங்களை பொறுத்தவரை சித்தாந்த அடிப்படையில் திமுகவை எதிரியாக பார்க்கிறோம் என்று கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

சென்னை தியாகராஜ நகரில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்திற்கு சென்றார். பின்னர் தமிழக அரசு பாஜக நிர்வாகிகள் மீதான பொய் வழக்குகள், மற்றும் தமிழக அதிகாரிகள் திமுக மாவட்ட செயலாளர்கள் போல திமுகவினரின் அட்டூழியங்களுக்கு துணை போவது குறித்த புகாரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பாஜக மாநில நிர்வாகிகள் வழங்கினர்.

மத்திய அமைச்சர் அமித்ஷா:

பிறகு தமிழக பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் வரலாறு காணாத நிகழ்வு நடைபெற்றுள்ளது. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நேற்றைய தினம் பிரதமர் திண்டுக்கல் வந்திருந்தார். அதேபோல் நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார்.

இதையும் படிங்க..அதிமுக உடன்பிறப்புகளே.! களத்தில் குதியுங்கள்.! அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

அண்ணாமலை பேட்டி:

இரண்டு நாட்கள், இவர்கள் இருவரும் இங்கு வந்தது மிகுந்த ஊக்கத்தை எங்களுக்கு கொடுக்கிறது. கொட்டும் மழையிலும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமரை பார்க்க குவிந்திருந்தனர். அதனை உடனடியாக பார்த்த பாரத பிரதமர் காரில் இருந்து வெளியே வந்து அனைவரையும் கை காட்டி நெகிழ்ச்சிபடுத்தினார். பிரதமர் எந்த அளவு நமது தமிழக மக்களிடையே அன்பு வைத்திருக்கிறார் என்பதை பார்க்க முடிந்தது.

பிரதமர் மோடி:

வரும் 19ம் தேதி காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக மக்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமரும் அந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்பேன் என கூறியுள்ளார். நேற்றைய தினம் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது 14,00,000 பேர் வணக்கம் மோடி என்ற ட்வீட்டை பதிவிட்டிருந்தனர். இது கடந்த முறையை விட 2 மடங்கு பெரியதாகும். திமுக பாஜகவை எதிரியாக பார்க்கிறார்கள். எங்களை பொறுத்தவரை சித்தாந்த அடிப்படையில் திமுகவை எதிரியாக பார்க்கிறோம்.

திமுக Vs பாஜக:

திமுகவுடன் தேர்தல் களத்தை எதிர்த்து சந்திக்க பாஜக தயாராக உள்ளது. பேரறிவாளன் குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அன்று ஒன்று, இன்று ஒன்று என இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. இன்றைக்கு நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் அது வேறு, இது வேறு என்று கூறி இருக்கின்றன.10 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக எதுவுமே தெரியாமல், தன் பிராமண எதிர்ப்பை மட்டுமே வைத்து அரசியல் செய்து வருகிறது.

இதையும் படிங்க..உச்சநீதிமன்ற உத்தரவு - நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேர் விடுதலை !

அதிமுக - பாஜக கூட்டணி:

திமுக, அதன் ஒரு சில கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டு அனைத்துக் கட்சி கூட்டம் என சொல்வது வேடிக்கையானது. இதில் அதிமுக, பாஜக பங்கேற்கவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றாலும், இதனை கண்ணை மூடிக்கொண்டு திமுக எதிர்க்கிறது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை எங்கள் நிலைபாட்டில் எந்த குழப்பமும் இல்லை. மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து எங்கள் பாராளுமன்ற குழு பேசி முடிவெடுக்கும்.

பாஜகவில் முக்கிய தலைவர்கள்:

முக்கிய தலைவர்கள் சேர வேண்டும் என காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்முடைய தலைவர்களைத் தொடர்பு கொண்டு சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான நேரம் வரும்.மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து எங்கள் பாராளுமன்ற குழு பேசி முடிவெடுக்கும். ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டு மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தார்கள்’ என்று கூறினார்.

இதையும் படிங்க..தமிழ்நாட்டில் தொடரும் கனமழை.. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன ? முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

click me!