10% இட ஒதுக்கீடு.. மாநில அரசு பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.. திருமாவளவன் அதிரடி !!

Published : Nov 12, 2022, 06:52 PM IST
10% இட ஒதுக்கீடு.. மாநில அரசு பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.. திருமாவளவன் அதிரடி !!

சுருக்கம்

இட ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு எடுக்கும் முடிவை மாநில அரசு அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இட ஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என சொல்லி வந்த சிலர் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். நூற்றாண்டு காலமாக போற்றி பாதுகாத்து வந்த சமூநீதி கொள்கைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்:

சாதியினால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை கொடுப்பதுதான் சமூக நீதி. இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை சேர்க்க கூடாது என ஜவஹர்லால் நேரு காலத்தில் பேசப்பட்டது. ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு தடுக்காது. ஏழை மக்களின் வறுமையை போக்க மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் திமுக அரசு ஆதரிக்கும்.  மாதம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா ? என்று பேசினார்.

இதையும் படிங்க..தமிழ்நாட்டில் தொடரும் கனமழை.. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன ? முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

அனைத்து கட்சி கூட்டம்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளையும் இந்த கூட்டத்திற்கு  அழைத்திருக்கிற முதலமைச்சருக்கு நெஞ்சார பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற இந்த சட்டம் செல்லுபடி ஆகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

விசிக தொல்.திருமாவளவன்:

இது சமூகநீதி மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆகவே இதை தமிழக அரசு ஏற்று நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. மத்திய அரசாங்கத்தில் 27 சதவிகிதம் ஓபிசி பிரிவினருக்கு இருக்கிறது, அரசாங்கத்தில் பழங்குடியினருக்கு ஏழரை சதவீதம் தான். எனவே இட ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு எடுக்கும் முடிவை மாநில அரசு அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிங்க..உச்சநீதிமன்ற உத்தரவு - நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேர் விடுதலை !

இட ஒதுக்கீடு:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய பள்ளிக்கல்வி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் அதை அப்படியே மாநில அரசும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. எனவே அதை மாநில அரசு பின்பற்றாமல் இருப்பதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை. மேலும் தமிழக அரசு ரிவ்யூ பெட்டிஷன் போட வேண்டும் என்று கோரிக்கையை எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து யார் வழக்கு போட்டார்களோ அவர்கள் தான் மறு ஆய்வு மனுவை போட முடியும்.

சீராய்வு மனு:

அதிமுக இதனை செய்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. இப்போது திமுக முடிந்த வகையில் முயற்சிக்கிறது. இந்த வழக்கை 9 நீதிபதிகள் அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளின் அமர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகமும் இதை விரிவுபடுத்தப்பட்ட நீதிபதிகள் முன் கொண்டு செல்ல கோரிக்கையை மறு சீராய்வு மனுவில் முன்வைக்கும் என்று சொல்லி இருக்கிறது என்று பேசினார்.

இதையும் படிங்க..அதிமுக உடன்பிறப்புகளே.! களத்தில் குதியுங்கள்.! அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!