திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை வைப்பது என்பது இந்துக்களை அவமதிக்கும் செயலாகும்.
கருணாநிதி சிலை
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 9 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலையை வரும் 8ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இன்று திருவண்ணாமலைக்கு வந்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை வைப்பது என்பது இந்துக்களை அவமதிக்கும் செயலாகும்.
மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?
எச்.ராஜா பேச்சு
சிலை அமைய பெற்றுள்ள இடத்துக்கு 92 சதுரடி மட்டுமே பட்டா உள்ளன. ஆனால், 250 சதுர அடிக்கு பட்டா உள்ளது வருவாய் துறை அதிகாரிகள் சான்று கொடுத்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு, 92 சதுர அடி என மாற்றி உள்ளனர். 250 சதுரடி என மாற்றிய வருவாய் துறை அதிகாரியை ஏன் கைது செய்யவில்லை ? பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு ஏவி விட்டதால், எதையும் செய்வேன் என்று செயல்படுபவர் அரசு ஊழியர் அல்ல.
அமைச்சர் எ.வ வேலு
அவர் அமைச்சர் எ.வ வேலு ஊழியராவார். அரசு ஊழியர் என்பதை நினைத்து செயல்பட வேண்டும். 250 சதுர அடி பட்டா இடம் என மாற்றிய வருவாய் துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அனைத்து ஆன்மிக சக்திகளையும் இணைத்து, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும். அமைச்சர் எ.வ வேலுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி வளாகத்தில் கருணாநிதியின் சிலையை வைத்துக்கொள்ளலாம்.
மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !
ஏன் கிரிவல பாதையில் வைக்க வேண்டும் ? அண்ணாமலையார் பூமியில் அண்ணாதுரை பெயரில் நுழைவு வாயில் அமைப்பது ஏன் ? உடனடியாக, அண்ணாமலையார் நுழைவு வாயில் என மாற்ற வேண்டும். கிரிவல பாதையில், கோயில் இடங்களை ஆக்கிரமித்து கடைகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதிமுக விவகாரம்
அடுத்த பவுர்ணமிக்கு முன்பாக, கிரிவல பாதையில் கோயில் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை கேட்டுக்கொள்கிறேன். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது. தேவகவுடா, நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, மாயாவதி, பழனிசாமி, பன்னீர்செல்வம், ராமதாஸ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு, ஒன்றரை மடங்கு வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்