திமுகவில் இணைகிறாரா முன்னாள் DGP ரவி IPS...??? அண்ணாமலைக்கு டப் கொடுக்க திட்டமா.?

By Ezhilarasan Babu  |  First Published Jul 4, 2022, 7:22 PM IST

தமிழக முன்னாள் ஓய்வு பெற்ற டிஜிபி ரவி IPS விரைவில் திமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பொருத்திருந்து பார்க்கலாம்  என சிரிப்பையே பதிலாக கூறியுள்ளார்.


தமிழக முன்னாள் ஓய்வு பெற்ற டிஜிபி ரவி IPS விரைவில் திமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பொருத்திருந்து பார்க்கலாம்  என சிரிப்பையே பதிலாக கூறியுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக பாஜகவில் இணைந்து தற்போது தமிழக பாஜகவின் மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக அரசியலுக்கு தான் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதேபோல சசிகாந்த் ஐஏஎஸ் தமிழக காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வருகிறார், கர்நாடக மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த சசிகாந்த் செந்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை  கட்டமைப்பை பாஜக சேதப்படுத்தி உள்ளது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐஏஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறினார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அவர் அரசியல் பணியாற்றி வருகிறார்.

இதையும் படியுங்கள்:பாஜக மத வெறியர்களுக்கு இந்த தீர்ப்பு செருப்படி..பாஜவை விளாசிய அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்நிலையில் அண்ணாமலை தமிழக அரசியல் களத்தில் திமுகவுக்கு எதிராக  தனது அரசியலை வேகப்படுத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை ஒவ்வொருவர் மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அரசு கொண்டு வரும் எந்த திட்டங்களாக இருந்தாலும் அவர் அதை கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்ணாமலையின் விமர்சனங்களுக்கு அமைச்சர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறி வருகின்றனர். அதேநேரத்தில் அண்ணாமலையின் கருத்துக்களும், அவர் பேச்சுக்களும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: "எச்சில் பிரியாணிக்காக இந்து தெய்வங்களை பேசுறியே.. அறிவில்ல.. திருமாவை தரம் தாழ்ந்து விமர்சித்த அர்ஜூன் சம்பத்

அண்ணாமலையை  சமாளிப்பது ஆளுங்கட்சிக்கு சவாலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக காவல் துறையிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார் ஐஏஎஸ் அதிகாரி ரவி ஐபிஎஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.  அதில் அவரிடம் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ள பதில்கள் விரைவில் அவர் திமுகவில் இணைவார் என்பது உறுதி செய்யும் வகையில் உள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- 

காவல்துறை என்பது மக்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு துறை. அது மக்களை இடையூறு செய்யும் பணியாகவே அதன் வேலை இருந்து வருகிறது. ஒருவர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியும் படி வலியுறுத்துகின்றனர், அப்போது மக்கள் காவல் துறையால் இடையூறு செய்யப்படுவதாக உணர்கின்றனர், இதனால் இயல்பாகவே காவல்துறை மீது மக்களுக்கு விமர்சனம் இருந்து வருகிறது. ஒரு கசப்புணர்வு ஏற்படுகிறது. அதே நேரத்தில் காவல் பணி என்பது அதிகாரம் செலுத்துகின்ற பணி அல்ல அது அலுவல் பணி.

மக்களிடம் கனிவுடன் அணுக வேண்டிய ஒரு பணி, ஏழை எளிய மக்கள் தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை காவல் நிலையத்திற்கு எடுத்து வருகின்றனர், அப்போது அவர்களிடம் காவல்துறை கனிவாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பாதிக்கப்பட்டு துயரத்தில் இருக்கற மக்களிடத்தில் லஞ்சம் எதிர்பார்க்க கூடாது, நான் இந்த அளவிற்கு தேசப்பற்றுடன், காவல் பணிக்கு வருவதற்கு காரணம் நான் தவறாமல் முரசொலியும், விடுதலை பத்திரிக்கையும் படிப்பேன். சிறுவயது முதலே அதை நான் படித்து வருகிறேன்.

எனது தந்தை முழுநேர அரசியல்வாதியாக இருந்தவர், கலைஞர் ஆட்சியில் இருந்தபோது தான் என்னுடைய திறமை முழுவதும் பயன்படுத்தப்பட்டது, நான் விழுப்புரம் எஸ்பி ஆக இருந்தபோது ஒரு அமைச்சர் என்னை மிரட்டினார், அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியிடம் நான் தொலைபேசியிலேயே அது குறித்து புகார் கூறினேன். அவர் அதை நிதானமாக கேட்டுக் கொண்டார். நான் முதல் முறை, முதலமைச்சரிடம் நேரடியாக பேசியது அப்போதுதான். யார் சொல்வதையும் கேட்டு நடவடிக்கை எடுக்க கூடியவர் கலைஞர். 

அதன்பிறகு அதிமுக ஆட்சியில்தான் நான் ஓரங்கட்டபட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக எனது முழு திறமை பயன்படுத்தப்படவில்லை, எனக்கு பிடித்த அரசியல் தலைவர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆவர்.  மக்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் நேரடியாக களத்திற்கு வந்து சந்திக்கும் மக்கள் பிரதி நிதியாக உதயநிதி உள்ளார் என்றார். அப்போது நெறியாளர் நீங்கள் படிக்கும் பத்திரிகை விடுதலை, முரசொலி, உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் ஸ்டாலின், உதயநிதி அப்படி என்றால் விரைவில்  திமுகவில் இணையப் போகிறீர்களா? ஏனென்றால் ஒரு சில கட்சியில் ஐபிஎஸ் அதிகாரிகள் வந்து இணைந்து இருக்கிறார்கள்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டியிருக்கிறது, முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும், அதனால் உங்களை பயன்படுத்த திமுக  அழைப்பு விடுத்தால் போவீர்களா? என எழுப்பிய கேள்விக்கு,  சிரித்தபடியே பொறுத்திருந்து பார்க்கலாம், நேரம் வரட்டும் என ரவி கூறியுள்ளார். எனவே விரைவில் அவர் திமுகவில் இணையக் கூடும், அந்த மனநிலைக்கு அவர் வந்திருப்பதை அவரது பதில்கள் காட்டிகிறது. இந்த பேட்டியைத் தொடர்ந்து அவர் திமுகவில் இணைவார் என்ன பேச்சு பரவலாக இருந்து வருகிறது. 

 

click me!