பாஜக போன்ற மத வெறியர்களுக்கு இந்த தீர்ப்பு செருப்படி..பாஜவை விளாசித் தள்ளிய அமைச்சர் மனோ தங்கராஜ்!

By Raghupati R  |  First Published Jul 4, 2022, 7:27 PM IST

அனைத்து இந்து மதத்தினரும் யேசுதாசின் ரசிகர்களாக உள்ளனர். இந்த விஷயத்தில் மனுதாரர் குறுகிய மனப்பான்மையுடன் பார்க்க கூடாது . பரந்த மனப்பான்மையயுடன் பார்க்க வேண்டும்.


கும்பாபிஷேக விழா

திருவட்டாரில் உள்ள அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவிலில் வருகின்ற ஜூலை 6ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. அப்போது இந்து அல்லாதவர்களை கோவில் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது, எனவே கும்பாபிஷேக விழாவின் போது இந்துக்கள் அல்லாதவர்களை கோவில் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Tap to resize

Latest Videos

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய சட்டத்தின் நோக்கம் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் நிர்வாகம் தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைப்பதாகும். அதற்கு பூஜைகளில் தலையிட அதிகாரம் இல்லை. கோயில்களால் தொடர்ந்து பின்பற்றப்படும் 14 வழிபாட்டு முறைகளை கடை பிடிக்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் மீது முழு கவனமும் செலுத்தப்படுவதால், தெய்வங்களுக்கும் பூஜைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது. இந்துக்கள் அல்லாதோரை பிரதான விருந்தனராக அனுமதித்தால் கோவில் சடங்குகள் பாதிக்கப்படும். 

மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?

அரசு தரப்பு வாதம்

குமரி கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோரை அனுமதிக்க கூடாது என வாதிட்டார். பிறகு அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், 'பிறரின் நம்பிக்கையில் நாம் தலையிட முடியாது. வேளாங்கண்ணி, நாகூர் தர்கா உள்ளிட்ட தலங்களுக்கு அதிகமான இந்துக்கள் பங்கேற்கின்றனர். இதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் வேளாங்கண்ணி, நாகர் தர்கா உள்ளிட்ட தலங்களுக்கு  நானே ஆண்டு தோறும் சென்று வருகிறேன். 

மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !

அதிகமான இந்துக்களும் சென்று வருகின்றனர், இதில் எந்த பாகுபாடும் இல்லை. கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பிரபல பாடகர் யேசுதாஸ், ஹரிவராசனம், ஐயப்பன் உள்ளிட்ட இந்து கடவுள்கள் குறித்து ஏராளமான பக்தி பாடல்களை பாடி உள்ளார். அனைத்து இந்து மதத்தினரும் யேசுதாசின் ரசிகர்களாக உள்ளனர். இந்த விஷயத்தில் மனுதாரர் குறுகிய மனப்பான்மையுடன் பார்க்ககூடாது. 

மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

பரந்த மனப்பான்மையயுடன் பார்க்க வேண்டும். நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை. கும்பாபிஷேக அழைப்பிதழில் அமைச்சர் மனோ தங்கராஜ் பெயர் போடப்பட்டு உள்ளது. அவர் அமைச்சர், கும்பாபிஷேக விழாவில் அரசியல் பேச மாட்டார்கள் என்று கூறி பொது நலமனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி!பாஜகவின் மத வெறி அரசியல் தமிழகத்தில் என்றும் எடுபடாது.

— Mano Thangaraj (@Manothangaraj)

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி. பாஜகவின் மத வெறி அரசியல் தமிழகத்தில் என்றும் எடுபடாது. மதுரை நீதிமன்றத்தின் கருத்து தான் பொதுமக்கள் அனைவருடைய கருத்து’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்

click me!