"இது உண்மையான ஜிஎஸ்டியே இல்லை" - பகீர் கிளப்பும் ப. சிதம்பரம்

 
Published : Jul 01, 2017, 12:30 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
"இது உண்மையான ஜிஎஸ்டியே இல்லை" - பகீர் கிளப்பும் ப. சிதம்பரம்

சுருக்கம்

this not true gst says chidambaram

தற்போது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையில் நிறைய குறைகள் உள்ளதால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது விரி விதிப்பு முறையில் வியாபாரிகளை வகைப்படுத்துவதில் குளறுபடி உள்ளதாகவும், பல பொருட்கள் ஜி.எஸ்.டி. வரியின்கீழ் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

வரி குறைந்ததால் மற்ற எல்லா விலைகளும் கட்டுக்குள் இருப்பதாக அர்த்தம் இல்லை. சந்தை பொருளாதாரத்தைபற்றி அறியாத போக்கு உள்ளதாகவும் அவர் கூறினார். ஒரு பொருளுக்கு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீத வரியாக குறைக்கும்போது அந்த பொருளின் விலை குறைக்க வேண்டும். அதை எப்படி குறைப்பது என்றும் கேள்வி எழுப்பினார்.

சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் இதுபோன்ற ஷரத்தை கொண்டு வந்துள்ளதாகவும் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

இரண்டு மூன்று நாடுகளில் ஜி.எஸ்.டி. கொண்டு வந்தன. ஆனால் இதனை மற்ற நாடுகள் ஏற்கவில்லை. தற்போது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பல குறைபாடுகளைக் கொண்டது. இதன் காரணமாக முதலில் பணவீக்கம் ஏற்படும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

80 சதவீத பொருட்கள் மீதான சேவை வரி நேற்றைய விலையைவிட இன்று கூடுதலாகும். சிறு-குறு, மற்றும் நடுத்தர வியபாரிகளுக்கு ஜி.எஸ்.டி. பெரும் சுமையாகும் என்று கூறியுள்ளார். 35 லிருந்து 40 சதவீத பொருட்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படவில்லை என்றார்.

மக்கள் தயாராக இல்லை. வியாபாரிகள் தயாராக இல்லை. அவர்களுக்கு அவகாசம் மறுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 2 மாதங்கள் அவகாசம் கொடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையில் நிறைய குறைகள் உள்ளதால் உண்மையான ஜி.எஸ்.டி. இல்லை என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!