
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்று அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. குறித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், ஜி.எஸ்.டி.யை முன்மொழிந்தது காங்கிரஸ் கட்சிதான் என்றும், ஜி.எஸ்.டி.க்கு முதல் விரோதி பாஜக என்றும் கூறினார்.
2010 ஆம் ஆண்டுக்குள் ஜி.எஸ்.டி. அமல் செய்ய வேண்டும என்ற நம்பிக்கை இருந்தது. அதன் தொடர்ச்சியாக ஜி.எஸ்.டி. அமைப்பு ஏறத்தாழ அனைத்தும் முற்றுப்பெற்ற நிலையில், பாஜக முட்டுக்கட்டை போட்டது. தமிழகத்தில் அதிமுகவும் முட்டுக்கட்டையில் சேர்ந்து கொண்டது.
அப்போது நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி.யை நிறைவேற்ற முடியவில்லை. 2014 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜி.எஸ்.டி. நாட்டுக்கு நல்லது. உண்மையான ஜி.எஸ்.டி. அமலுக்கு வர வேண்டும் என்று உளப்பூர்வமாக வர வேண்டும் என்று நம்பினோம். நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்பு தந்தோம். அதன் பிறகு மாநிலங்கள் அந்த சட்டத்தை நிறைவேற்றின. இப்போது ஜி.எஸ்.டி. வரி இன்று முதல் அமல்படுத்தப்பட்டது என்றார்.
காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சியும் ஜி.எஸ்.டி.யை முன்மொழிந்தவர்கள், ஆதரித்தவர்கள் என்பதில் மாற்றம் இல்லை என்று கூறினார்.
மற்ற நாடுகளுடன் 18 சதவீதம் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், இது அதிகம். அதாவது 15 சதவீதத்தில் இருந்து 15.5 சதவீதமாக இருந்தால் போதும். ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ளது 18 சதவீத வரி. தற்போது அமலுக்கு வந்திருப்பது ஜி.எஸ்.டி. அல்ல என்று கூறினார்.