அடுத்த 3 நாளைக்கு இதுதான் நிலைமை...!! தமிழக மக்களே மிகவும் எச்சரிக்கையாக இருங்க.

By Ezhilarasan BabuFirst Published Nov 5, 2020, 3:54 PM IST
Highlights

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மிக கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை மற்றும் தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த 48 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 72 மணி நேரத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்சையும் ஒட்டி பதிவாக கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் தாராபுரம் (திருப்பூர்) 17 சென்டி மீட்டர் மழையும், பிளவக்கல் (விருதுநகர்) 16 சென்டி மீட்டர் மழையும், மூலனூர் (திருப்பூர்) 13 சென்டிமீட்டர் மழையும், ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 12 சென்டிமீட்டர் மழையும், உசிலம்பட்டி (மதுரை) 11 சென்டி மீட்டர் மழையும், வத்திராயிருப்பு (விருதுநகர்) குன்னூர் (நீலகிரி) கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) தல 6 சென்டிமீட்டர் மழையும், ஆலந்தூர் சென்னை 8 சென்டி மீட்டர் மழையும், ராஜபாளையம் (விருதுநகர்) டிஜிபி அலுவலகம் (சென்னை) எட்டயபுரம் (தூத்துக்குடி) போடிநாயக்கனூர் (தேனி) தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 
 

click me!