8 மணி நேரம், 3700 கடல் மைல் தூரம்... ஒரே மூச்சாக இந்தியா வந்த 3 ரஃபேல் ஜெட் விமானங்கள். தூக்கம் இழந்த சீனா.

By Ezhilarasan BabuFirst Published Nov 5, 2020, 3:18 PM IST
Highlights

சுமார் 3,700 கடல் மைல்களுக்கு மேல், 8 மணி நேரத்துக்கு மேல் இந்த விமானங்கள் பறந்துள்ளன. இதன் மூலமாகவே இந்த விமானங்கள் எவ்வளவு திறன் படைத்தவை என்பதை  அறிய முடியும் என இந்திய விமானப்படை பெருமிதம் தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பிரான்சிலிருந்து மேலும் மூன்று  ரஃபேல் ஜெட் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் எல்லையில் இந்தியா பதட்டமான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில்,இந்தியா தனது பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.முன்னதாக விமானப்படையை பலப்படுத்தும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரான்சிடம் இருந்து ரபேல் விமானங்களை இறக்குமதி செய்ய இந்தியா-பிரான்ஸ் அரசாங்கங்களுக்கு இடையே கையெழுத்து ஒப்பந்தமானது.அதன்படி கடந்த ஜூலை 29 ஆம் தேதி அபுதாபி வழியாக முதல் 5 போர் விமானங்கள் அம்பாலா விமானநிலையத்தை வந்தடைந்தன.அவைகள்  ஏற்கனவே IAF-இன் படைப்பிரிவு 17-இல் சேர்க்கப்பட்டுள்ளன.அதற்கான நிகழ்ச்சியை கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிலையில் விமானப்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மேலும் மூன்று ரஃபேல்  போர் ஜெட் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. 

இந்த விமானங்கள் பிரான்சிலிருந்து நேற்று (4-11-2020) காலை புறப்பட்டு எங்கேயும் நிற்காமல் இரவு 8:14 மணிக்கு இந்தியா வந்திறங்கியதாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.இந்த விமானங்கள் பிரான்சின் இஸ்ட்ரெஸ் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இந்தியாவின் குஜராத் மாநிலம் ஜாம் நகர் வந்தடைந்தது. இந்த போர் விமானங்கள் சுமார் 8 மணி நேரம் வானில் பறந்துள்ளது,பிரான்ஸ் விமானப் படை விமானம் மூலம்  வானில் எரிபொருள் நிரப்பப்பட்டு இந்தியா வந்தடைந்துள்ளது.  கடந்த ஜூலை மாதம்  முதல் தொகுப்பில் வந்த ஐந்து விமானங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அல்-தப்ரா விமான நிலையத்தில் தரையிறங்கி சில மணி நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் இந்தியா வந்து.ஆனால் இந்த முறை வந்துள்ள 3 விமானங்களும் பிரான்சிலிருந்து எந்த இடத்திலும் நிற்காமல் நேரடியாக இந்தியா வந்து சேர்ந்துள்ளது.தற்போது வந்துள்ள மூன்று விமானங்களும் இந்தியா நோக்கி வருகையில் மூன்று முறை பறந்தபடியே விண்ணில் எரிபொருள் நிரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 3,700 கடல் மைல்களுக்கு மேல், 8 மணி நேரத்துக்கு மேல் இந்த விமானங்கள் பறந்துள்ளன. இதன் மூலமாகவே இந்த விமானங்கள் எவ்வளவு திறன் படைத்தவை என்பதை  அறிய முடியும் என இந்திய விமானப்படை பெருமிதம் தெரிவித்துள்ளது.  ஒருபுறம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் உண்மையான  கட்டுப்பாட்டு வரிசையில் பதட்டம் தொடர்ந்து வரும் நிலையில், மறுபுறம் படைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா தீவிரம் காட்டி வருவதை இது காட்டுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிக்கலான பணியை தொழில்முறை மற்றும் பாதுகாப்பான முறையில் IAF வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரஃபேல் ஜெட் விமானங்கள், ரஷ்யாவிலிருந்து சுகோய் ஜெட் விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்ட 23 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பெரிய போர் விமான கொள்முதலாக கருதப்படுகிறது. தற்போது வந்துள்ள 3 விமானங்களும் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட உள்ளது. 

இதன்மூலம் இந்தியாவில்  ரஃபேல் பேர் விமானங்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் 3 விமானங்களும், மார்ச் மாதம் 3 விமானங்களும், ஏப்ரலில் 6 விமானங்களும் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் 2023 குள் 36  ரஃபேல் விமானங்களும் இந்தியாவின் கைக்கு கிடைக்கும் என விமானப் படை தெரிவித்துள்ளது.இந்த ஜெட்விமானங்கள் பலவிதமான சக்தி வாய்ந்த ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டவை என்றும்,  ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பாளர் எம்பிடிஏவின் விண்கல காட்சி வரம்பிற்கு அப்பால் ஏர்-டு-ஏர் ஏவுகணை, ஸ்கால்ப் க்ரூஸ் ஏவுகணை மற்றும் மைக்கா ஆயுத அமைப்பு ஆகியவை ரஃபேல் ஜெட் விமானங்களின் ஆயுத தொகுப்பின் முக்கிய இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த போர் விமானத்தில் ஹேமர் ஏவுகணைகள் உள்ளன. இது விண்கல், SCALP மற்றும் MICA போன்ற காட்சி வரம்பு ஏவுகணைகளுடன் ஆயுதம் ஏந்தி, தூரத்திலிருந்து உள்வரும் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை எனவும் பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஃபேல் பேர் விமானங்களின் முதல் தொகுப்பு இந்தியா வந்தபோதே பதற்றமடைந்த சீனா, பாகிஸ்தான் தற்போது அதன் இரண்டாம் தொகுப்பும் இந்தியா வந்தடைந்திருப்பது அந்நாடிகளுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த தொடர் அதிரடி நடவடிக்கையால் இரு நாடுகளும் தூக்கத்தை இழந்து தவிக்கும் நிலைக்க தள்ளப்பட்டுள்ளது என்றே கூறலாம். 

 

click me!