இதை இப்படியே மெயின்டன் பண்ணுங்க.. கொரோனாவை ஒழிக்க இதுதான் சிறந்த வழி.. அரசுக்கு ராமதாஸ் அட்வைஸ்.!

By vinoth kumarFirst Published Jun 29, 2021, 1:23 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை இதே அளவில் தொடர வேண்டும். கொரோனா பரவல் தீவிரமடைகிறதா? என்பதை கண்காணிப்பதற்கான சிறந்த வழிமுறை சோதனைகள் தான். அவை குறைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்! என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தினசரி  கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 5000-க்கும் கீழ் குறைந்தாலும் தினசரி சோதனைகளின் எண்ணிக்கை குறைக்ககூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது மிக வேகமாக பரவியது. பாதிப்பு எண்ணிக்கை  36,000 லிருந்து 5000க்கும் குறைவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4,804 பேருக்கு தொற்று உறுதியாகியது. மேலும், 98 பேர் உயிரிழந்துள்ளனர். 6,553 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தமிழகத்தில் நாள்தோறும் 1.60 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையில், 3,25,15,205 பேருக்கு பரிசோதனை செய்ததில், 24,70,678 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாள்தோறும் 1.60 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தொடர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் தினசரி  கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 5000-க்கும் கீழ் குறைந்தாலும் தினசரி சோதனைகளின் எண்ணிக்கை 1.60 லட்சத்திற்கும் கீழ் குறையாமல் தொடர்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இது சரியான நடவடிக்கை!

தமிழ்நாட்டில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை இதே அளவில் தொடர வேண்டும். கொரோனா பரவல் தீவிரமடைகிறதா? என்பதை கண்காணிப்பதற்கான சிறந்த வழிமுறை சோதனைகள் தான். அவை குறைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்! என பதிவிட்டுள்ளார்.

click me!