கோவையில் முக்கிய அதிகாரிகள் முகாம்..! எஸ்பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் ஸ்கெட்ச்..!

By Selva KathirFirst Published Jun 29, 2021, 1:12 PM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக கந்தசாமி நியமிக்கப்பட்டார். இவர் சிபிஐயில் பல முக்கியமான வழக்குகளை கையாண்டவர். பிறகு ஒரு சில சர்ச்சைகளால் மறுபடியும் மாநிலப்பணிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இது நாள் வரை டம்மியான போஸ்டுகளில் இருந்த கந்தசாமியை, திமுக ஆட்சிக்கு வந்த உடன் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் எனும் மிக முக்கிய பதவியில் ஸ்டாலின் அமர வைத்துள்ளார். 

சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் மட்டும் அல்ல அதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் நபராக எஸ்.பி.வேலுமணி சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று மு.க.ஸ்டாலின் கூறி வந்த நிலையில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

திமுக ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக கந்தசாமி நியமிக்கப்பட்டார். இவர் சிபிஐயில் பல முக்கியமான வழக்குகளை கையாண்டவர். பிறகு ஒரு சில சர்ச்சைகளால் மறுபடியும் மாநிலப்பணிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இது நாள் வரை டம்மியான போஸ்டுகளில் இருந்த கந்தசாமியை, திமுக ஆட்சிக்கு வந்த உடன் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் எனும் மிக முக்கிய பதவியில் ஸ்டாலின் அமர வைத்துள்ளார். பதவிக்கு வந்தவருக்கு கொடுக்கப்பட்ட முதல் அசைன்மென்டே எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தொடங்கி அதிமுக கால அமைச்சர்களின் மீதான புகார்களை விசாரிப்பது தான்.

அத்தோடு ஒரு சில முன்னாள் அமைச்சர்களை கைது செய்வதற்கான அசைன்மென்டும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு மாத காலமாக ஆதாரங்களை திரட்டி வந்த கந்தசாமி, கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது எஸ்பி வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் என மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து ஆலோசித்ததாக சொல்கிறார்கள். இறுதியில் எஸ்பி வேலுமணி விவகாரத்தை கையில் எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இதன் அடிப்படையில் டிஜிபி கந்தசாமியின் உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறையில் அவருக்கு நம்பகமான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

அங்கிருந்தபடி எஸ்பி வேலுமணிக்கு எதிரான புகார்கள் மீதான ஆதாரங்களை வலுப்படுத்துவதுடன் சில சாட்சியங்களையும் தயார் செய்வதாக கூறுகிறார்கள். மேலும் கைது நடவடிக்கையின் முதல்படியாகவே அதிகாரிகள் கோவையில் சென்று முகாமிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். அந்த வகையில் மேலிடத்தில் இருந்து எப்போது உத்தரவு வந்தாலும் தமிழகத்தையே பரபரப்பாக்கும் அந்த கைது நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!