நாரதர் கலகத்தை ஆரம்பித்ததால் போனில் அழைத்த ரஜினி தரப்பு... அந்தர் பல்டியடித்த நடிகை கஸ்தூரி..!

Published : Jun 29, 2021, 01:19 PM IST
நாரதர் கலகத்தை ஆரம்பித்ததால் போனில் அழைத்த ரஜினி தரப்பு... அந்தர் பல்டியடித்த நடிகை கஸ்தூரி..!

சுருக்கம்

இந்தியாவில் இல்லாத மருத்துவ வசதிகளா..? அவருக்கு என்ன பிரச்சினை, இதை ரஜினி தெளிவுப்படுத்த வேண்டும் என டிவிட்டரில் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார் நடிகை கஸ்தூரி. 

கொரோனா காலத்தில் அமெரிக்காவுக்கு சென்று சோதனை செய்ய வேண்டிய அளவுக்கு ரஜினிக்கு என்ன பிரச்னை. இதற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள். இந்தியாவில் இல்லாத மருத்துவ வசதிகளா..? அவருக்கு என்ன பிரச்சினை, இதை ரஜினி தெளிவுப்படுத்த வேண்டும் என டிவிட்டரில் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார் நடிகை கஸ்தூரி. 

கஸ்தூரி ட்விட்டர் பதிவில் ஏதையாவது எழுதி பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்புவதும் வாடிக்கைதான். ஆனா; இந்த முறை ரஜினி ரசிகர்கள் கொதித்து விட்டனர். ’’உங்களது தனிப்பட்ட விவரங்களை நீங்கள் பொதுவெளியில் தெரிவிப்பீர்களா? ஒருவரது தனிப்பட்ட உடல்நிலை சார்ந்த விஷயத்தை சம்பந்தப்பட்டவர் அனுமதி இல்லாமல் பேசுவது சட்டவிதிமீறல் என ரசிகர்களும் ட்விட்டர்வாசிகளும் கோபமடைந்தனர். 

ஒருவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்றால் அவர் நல்லபடியாக ஊர் திரும்ப வேண்டும் என வாழ்த்துவதை விட்டுவிட்டு தேவையில்லாத விவாதங்கள் தேவைதானா என்றும் சிலர் கேட்டனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு எதற்காக சென்றார் என்பது குறித்து செல்போனில் விளக்கியதாக ட்வீட் போட்டுள்ளார் கஸ்தூரி.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ’’அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி ! நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம்’’என அவர் தெரிவித்துள்ளார்.

 இதையடுத்து என்னத்த வெளக்குனாங்கனு கொஞ்சம் விவரமா விளக்குவீங்கன்னு நம்புறோம்னு ஒருவர் வலைஞர் கேட்ட கேள்விக்கு கஸ்தூரி, சொல்ல முடிந்ததை சொல்லிவிட்டேன் என்றார். அவர்கள் சொன்ன விளக்கத்தை ஏன் நீங்கள் இங்கு ஷேர் செய்யக் கூடாது என ஒருவர் கேட்க, அதற்கு கஸ்தூரி, மருத்துவம் என தெரிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் ஒரே நாளில் பல்டியடித்துள்ளார் கஸ்தூரி.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!