கூட்டணியை பொறுத்த வரை நான் சொல்ற பதில் இதுதான்.! திமுகவிற்கு சாமி, கோவில் என்றாலே அலர்ஜி.! வானதி சீனிவாசன்.!

By vinoth kumar  |  First Published Sep 20, 2023, 8:53 AM IST

விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய விழாவாக மாற்ற பாஜகவினர் முயன்று வருகின்றனர். திமுகவிற்கு சாமி, கோவில், பூஜை என்றால் ஒரு அலர்ஜி இருக்கிறது.


இந்துமத  நம்பிக்கைகளை சீரழிக்கும் பணிகளை திமுக செய்து கொண்டிருக்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். 

கோவையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான பேட்டியளிக்கையில்;- நாடாளுமன்றத்தில் புதிய கட்டிடத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெறுவதற்கு நீண்ட நாட்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், பெண்களின் நலனை முன்னிறுத்தி 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஊடக விவாதங்களில் மீண்டும் பங்கேற்கும் பாஜக கரு.நாகராஜனுக்கு முக்கிய பதவி.. 30 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு.!

இந்த மசோதாவிற்கு அனைத்து அரசியல்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து ஒருமனதாக நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்த மசோதாவை பற்றி அரசியல் ரீதியாக விமர்சிப்பதை, விட்டுவிட்டு முழுமையாக பரிபூரண மனதுடன் ஆதரவு கொடுக்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலைப் பற்றி பேசும் கனிமொழி, 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கட்சி தீர்மானம் போட்டு இருக்கிறார்கள். எந்த வாக்குக்காக திமுக தீர்மானம் போட்டது. ஜனாதிபதியாக உயர்ந்த ஸ்தானத்தில் பழங்குடி இனத்தவை சேர்ந்தவர் அமர வைக்கப்பட்டிருக்கும் சனாதனம் என்றால் அதை வரவேற்க பாருங்கள் என்றார். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா வரலாற்று நாள். 

குடியரசு தலைவரை எந்த இடத்தில் அழைக்க வேண்டும் என்பதற்கு விதிமுறை இருக்கிறது. விதிமுறை மற்றும் மரபுகளில் இருந்து பாஜக விலகி இருக்காது. விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய விழாவாக மாற்ற பாஜகவினர் முயன்று வருகின்றனர். திமுகவிற்கு சாமி, கோவில், பூஜை என்றால் ஒரு அலர்ஜி இருக்கிறது. அதனால் அரசியல் அதிகாரத்தை வைத்து இதை தடுக்கின்றனர். இந்துமத  நம்பிக்கைகளை சீரழிக்கும் பணிகளை திமுக செய்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க;- இந்த நாடகத்தை நிறுத்துங்க! உங்க நண்பர்கள் கிட்ட சொல்லி தண்ணீர் திறந்துவிட சொல்லுங்க! முதல்வரை சீண்டும் வானதி.!

கூட்டணியை பொறுத்தவரை தேசிய தலைமைதான் முடிவு செய்யும். அதனால் இந்த விஷயத்தில் கூட்டணி தொடர்வது, கூட்டணியில் யார் இருப்பது , யார் தலைமை என்பது எல்லாமே கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்யும் என்றார். கூட்டணியை பொறுத்த வரைக்கும் நான் சொன்ன இந்த பதிலை தவிர என்கிட்ட வேறு பதில் இல்லை. கூட்டணி தொடர்பாக எந்த ஒரு பதிலையும், வார்த்தையும் நான் சொல்ல தயாராக இல்லை என்றார்.
 

click me!