புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா செந்தில் பாலாஜி.! ஜாமின் மனு மீது இன்று முக்கிய தீர்ப்பு

By Ajmal Khan  |  First Published Sep 20, 2023, 8:05 AM IST

சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான தீர்ப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று வழங்கப்படுகிறது.


அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்டங்களை கடந்த இந்த வழக்கானது,  உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இருதய பகுதியில் அடைப்பு இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

Latest Videos

undefined

இதனை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருதய அறுவை சிகிச்சை முடிந்து உடல்நிலை முன்னேற்றம் அடைந்தை தொடர்ந்து  புழல் சிறையில் கடந்த ஜூலை மாதம் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் செந்தில் பாலாஜி வழக்கானது எம்பி, எம்எல்ஏக்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜாமின் மனுவை விசாரிக்க மறுத்த  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி,  சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தினார். 

இதனை தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமின் மனு தாக்கல் செய்த போது தங்களுக்கும் ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகாரம் இல்லை.  யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை கருத்தை அறிய வேண்டும் என கூறியது. இருதரப்பும் ஜானின் மனைவி விசாரிக்க மறுத்த நிலையில் உயர்நீதிமன்றத்திற்கு செந்தில்பாலாஜி தரப்பு சென்றது.  அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் செஞ்சி பாலாஜி வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றுவது தவறு எனக் கூறியது. எனவே செந்தில் பாலாஜி வழக்கை சென்னை முதன்மை அமரு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. இதனை அடுத்து  ஜாமீன் மனுவையும் சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

பல கட்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த வாரம் செந்தில் பாலாஜி ஜாமின் மனு விசாரணை வந்தது.  அப்போது அமலாக்கத்துறை செஞ்சி பாலாஜிக்கு ஜாமின் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தது.  இந்த பரபரப்பான வாதங்களுக்கு மத்தியில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான் தீர்ப்பு செப்டம்பர் 20ஆம் தேதிக்கு வைக்கப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாவின் மனு மீதான தீர்ப்பு இன்று காலை சென்னை முதுமை அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது.  90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி புழல்  சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா.?  அல்லது ஜாமீன் மறுக்கப்பட்டு 100வது நாளிலும் புழல் சிறையிலேயே செந்தில் பாலாஜி இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

click me!