அதிமுக ஆட்சியிலும் பாமக தான்.. திமுக ஆட்சியிலும் பாமக தான்.. காலரை தூக்கி விடும் ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Jun 11, 2022, 6:23 AM IST
Highlights

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக கடந்த 6 ஆண்டுகளாக தீவிரமாக போராடி வருகிறது. கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட பாமக தான் காரணம். இப்போதும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கும் பாமக தான் காரணம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக அறிவித்த போராட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக தமிழக அரசின் அறிவிப்பு வந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி என ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். அதை வலியுறுத்தி பாமக சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் தான் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டத்தை உருவாக்கச் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு அடுத்த இரு வாரங்களில் தங்கள் பரிந்துரையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- ''தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதும், அக்குழுவின் அறிக்கையை இரு வாரங்களில் பெற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக கடந்த 6 ஆண்டுகளாக தீவிரமாக போராடி வருகிறது. கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட பாமக தான் காரணம். இப்போதும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கும் பாமக தான் காரணம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக அறிவித்த போராட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக தமிழக அரசின் அறிவிப்பு வந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கும், ஆக்கப்பூர்வ அரசியலுக்கும் கிடைத்த வெற்றி ஆகும். இதில் பாமக பெருமிதமடைகிறது.

வல்லுநர் குழுவின் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, இரு வாரங்களில் அறிக்கை பெறப்பட வேண்டும். அதன் பின்னர் எந்த தாமதத்திற்கும் இடம் கொடுக்காமல் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டு்ம் என்று வலியுறுத்துகிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!