அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் மகா தீபத்தை வழிபட்ட துர்கா ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Nov 22, 2021, 8:52 AM IST
Highlights

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ம் தேதி அண்ணாமலையார் சன்னதியில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து, அவர் வைகுண்ட வாசல் வழியாக கோவிலின் பின்புறமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை தரிசனம் செய்தார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ம் தேதி அண்ணாமலையார் சன்னதியில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நவம்பர் 19ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் திருக்கோவில் கருவறையின் முன் பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து திருக்கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீபம் மலையின் மீது மகா தீபமாக ஏற்றப்பட்டது.

இந்த மகா தீப திருவிழாவை கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.  மகா தீபத் திருவிழா நிறைவடைந்த நிலையில் தற்போது தெப்பல் உற்சவம் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகையை அடுத்து மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.கம்பன் மற்றும் திரளான திமுக நிர்வாகிகள் அவர்களை வரவேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். 

இதனையடுத்து, கோவிலில் விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் வழிபட்டு, மகா தீபத்தையும் வழிபட்டார். துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை வழங்கி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

click me!