திருப்புவனம் யூனியன் தலைவர் தேர்தல்3வது முறையாக ரத்து.!! கவுன்சிலர்களை கேரளாவுக்கு கடத்தியது யார்.!!

By Thiraviaraj RMFirst Published Mar 4, 2020, 10:20 AM IST
Highlights

சுயேச்சை கவுன்சிலர்கள் இருவர் உள்பட 5 கவுன்சிலர்கள் தாங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ள நிலையில் ஆட்சியரின் உத்தரவுப்படி தேர்தல் அலுவலர் வழக்கம்போல் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

T.Balamurukan

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு இருமுறை ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் மூன்றாவது முறையாக இன்று 4ந் தேதி நடக்கவிருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கே பரபரப்பு பற்றியிருக்கிறது.

அதிமுக திமுக ஆகிய கட்சிகள் திருப்புவனம் யூனியன் சேர்மன் பதவியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது, அதன்படி திமுக காங்கிரஸ்க்கும், அதிமுக தமாகவுக்கும் ஒதுக்கியுள்ளது.காங்கிரஸ் சார்பில் முன்னாள் சேர்மன் பாலசுப்பிரமணியன்,தமாக சார்பில் சின்னையாவும் யூனியன் சேர்மன் பதவிக்கு போட்டியில் இருக்கிறார்கள். மொத்தமுள்ள 17 கவுன்சிலர்களில் சுயட்சைகள் உட்பட 10 பேரும், அதிமுக கூட்டணியில் 7 கவுன்சிலர்களும் இருக்கிறார்கள். திமுகவில் உள்ள கவுன்சிலர்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டதாகவும் அதனால் இந்த முறையும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுயேச்சை கவுன்சிலர்கள் இருவர் உள்பட 5 கவுன்சிலர்கள் தாங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ள நிலையில் ஆட்சியரின் உத்தரவுப்படி தேர்தல் அலுவலர் வழக்கம்போல் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.நள்ளிரவில் வெளியிடப்பட்ட அறிவிப்பு நோட்டீஸ் திருப்புவனம் ஒன்றிய அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. இதன்காரணமாக திருப்புவனத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பாக காட்சியளிக்கிறது திகுதிகு திருப்புவனம்.

click me!