2 தொகுதி இடைத்தேர்தல்... போயஸ் கார்டனில் நடந்த பரபர ஆலோசனை..! ஆனால் ரஜினி எடுத்த முடிவு..?

By Selva KathirFirst Published Mar 4, 2020, 10:18 AM IST
Highlights

திமுக எம்எல்ஏக்கள் கேபிபி சாமி மற்றும் காத்தவராயன் காலமானதை தொடர்ந்து திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகள் காலியாகியுள்ளன. எம்எல்ஏக்கள் இருவர் உயிரிழந்த சில நாட்களுக்கு உள்ளாகவே சட்டப்பேரவை செயலாளர் எம்எல்ஏக்கள் இறந்த காரணத்தினால் குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்கை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த 2 தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையமும் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் அதிமுக தரப்பு உறுதியாக இருக்கும் நிலையில் அதில் போட்டியிடுவது குறித்து ரஜினி வீட்டில் பரபர ஆலோசனை நடைபெற்றுள்ளது.

திமுக எம்எல்ஏக்கள் கேபிபி சாமி மற்றும் காத்தவராயன் காலமானதை தொடர்ந்து திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகள் காலியாகியுள்ளன. எம்எல்ஏக்கள் இருவர் உயிரிழந்த சில நாட்களுக்கு உள்ளாகவே சட்டப்பேரவை செயலாளர் எம்எல்ஏக்கள் இறந்த காரணத்தினால் குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்கை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த 2 தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையமும் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த ஆண்டு மே 24ந் தேதியுடன் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது. பொதுவாக பொதுத் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கும் குறைவான கால கட்டம் இருக்கும் போது காலியாகும் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் வழக்கம் கிடையாது. ஆனால் அதற்கு முன்பு தொகுதிகள் காலியானால் காலி என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல்களில் வென்ற அதே பார்முலாவுடன் குடியாத்தம் மற்றும் திருவொற்றியூரை வெல்ல முடியும் என்று அதிமுக நம்புகிறது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்த இரண்டு இடைத் தேர்தல் தொகுதிகளையும் வென்றால் அது அதிமுகவிற்கு பொதுத் தேர்தலில் சாதகமாக அமையும். எனவே இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் அதிமுக தரப்பு ஆர்வமாக உள்ளது. இதன் காரணமாகவே இந்த இரண்டு தொகுதிகளையும் காலியாக இருப்பதாக துரிதகதியில் சட்டப்பேரவை செயலாளர் அறிவிக்கை வெளியிட்டார்.

இது ஒரு புறம் இருக்க அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்க உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ரஜினி கூறிவிட்டார். இதனால் அவர் எந்த நேரத்திலும் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அப்படி இந்த மே மாதத்திற்குள் ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிட்டால் அதன் பிறகு இடைத்தேர்தல் நடைபெற்றால் அதில் அவரது கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா என ஒரு கேள்வி எழுந்தது. இது குறித்து தனக்கு நெருக்கமான மன்ற நிர்வாகிகளை அழைத்து ரஜினி பேசியதாக சொல்கிறார்கள்.

இடைத்தேர்தலுக்கு முன்னதாக கட்சி ஆரம்பித்தால் அந்த தேர்தலில் போட்டியிட வேண்டிய நெருக்கடி ஏற்படும். கட்சி ஆரம்பித்துவிட்டு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். அதே சமயம் இடைத்தேர்தலில் அதிமுகவின் பணபலம் மற்றும் அதிகார பலத்தை எதிர்கொண்டு வெற்றிக்கனியை பறிக்க பிரதான எதிர்கட்சியான திமுகவே திக்குமுக்காடும். அப்படி இருக்கையில் அவர்களுடன் மல்லுகட்ட முடியுமா? என்பது தான் ரஜினி நடத்திய ஆலோசனையின் பின்னணி என்கிறார்கள். எனவே இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை பொறுத்தே ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

click me!