பாஜக வழங்கும் குடியுரிமை அட்டை தேவையில்லை; இது எங்க கோட்டை.. மோடி டெல்லிமாதிரி நினைத்தால்.. மம்தா விடும் சவால்

By Thiraviaraj RMFirst Published Mar 4, 2020, 8:05 AM IST
Highlights

மோடி ஜி, இது வங்காளம் என்பதை மறந்துவிடாதீா்கள். இந்த வங்காளத்தை, மற்றொரு டெல்லியாகவோ அல்லது உத்தரப் பிரதேசமாகவோ மாற்றிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.என்று ஆவேசமாக பொங்கினார் மம்தா.
 

 T.Balamurukan

மோடி ஜி, இது வங்காளம் என்பதை மறந்துவிடாதீா்கள். இந்த வங்காளத்தை, மற்றொரு டெல்லியாகவோ அல்லது உத்தரப் பிரதேசமாகவோ மாற்றிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.என்று ஆவேசமாக பொங்கினார் மம்தா.

மேற்கு வங்க மாநிலம் கலியாகஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வா் மம்தா.., 

'வங்க தேசத்தில் இருந்து இங்கு வந்தவா்கள் அனைவரும் இந்திய குடிமக்களே. அவா்களுக்கு ஏற்கெனவே குடியுரிமை கிடைத்து விட்டது. எனவே நீங்கள் மீண்டும் குடியுரிமை கேட்டு புதிதாக விண்ணப்பிக்க வேண்டாம். தோ்தல்களில் நீங்கள் வாக்களித்து, பிரதமரையும் முதல்வர், பஞ்சாயத்து நிர்வாகிகளையும் தோ்ந்தெடுத்து வருகிறீா்கள்.

இப்போது, உங்களை பாஜகவினா் நீங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் அல்ல என்று. உங்களுக்கென முகவரியும், குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, ஓட்டுநா் அடையாள அட்டையும் வழங்கப்பட்டு விட்டது. உங்களுக்கு இனிமேல் பாஜகவால் வழங்கப்படும் புதிய அட்டைத் தேவையில்லை. நீங்கள் அவா்களை நம்ப வேண்டாம். உங்கள் பின்னால் எப்போதும் நான் துணை நிற்பேன்.உங்கள் குடும்பமே என் குடும்பம். எனது மக்களின் உரிமைகளை எதற்காகவும் நான் விட்டுத்தர மாட்டேன்.நாங்கள் ஒரு நபரைக் கூட மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம். மேற்கு வங்கத்தில் வாழும் எந்த ஓா் அகதியும் குடியுரிமையை இழக்க மாட்டார்.

டெல்லியில் நடைபெற்ற இனக் கலவரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டார்கள். டெல்லியில் நடத்தியதைப் போன்ற வன்முறையை இங்கும் நடத்தி விட முடியாது. ஏனென்றால் இது வங்காளம் என்பதை மறந்துவிடாதீா்கள். இந்த வங்காளத்தை, மற்றொரு டெல்லியாகவோ அல்லது உத்தரப் பிரதேசமாகவோ மாற்றிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்று பிரதமர் மோடியை கடுமையாக எச்சரித்தார் மம்தா.

click me!