தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் நேற்று இரவு சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தேமுதிகவுக்கு ஒதுக்குவது தொடர்பாக சுதீஷ் ஓ.பி.எஸ்ஸிடம் பேசியதாக கூறப்படுகிறது.
கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது. திமுகவா? அதிமுகவா? என இறுதி வரை தேமுதிக தலைமை மாறிமாறி பேசி வந்த நிலையில் 4 தொகுதிகளுடன் அதிமுக கூட்டணியில் ஐக்கியமானது. அப்போது தேமுதிகவிற்கு மாநிலவங்களையில் ஒரு எம்.பி பதவி கொடுப்பதாக அதிமுக கூறியுள்ளது. ஆனால் அதுகுறித்து ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.
பாமகவிற்கு மாநிலங்களவை பதவி கொடுப்பது குறித்து கூட்டணி ஒப்பந்தத்தில் இருகட்சிகளும் கையெழுத்திட்டிருந்தனர். அதன்படி பாமகவிற்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டு அதிமுக தயவில் அன்புமணி எம்.பி ஆனார். இதனிடையே தற்போது தமிழகத்தின் சார்பாக 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாகிறது. அவற்றில் திமுகவும் அதிமுகவும் தலா 3 உறுப்பினர்களை பெறும் சூழல் நிலவுகிறது. இந்தநிலையில் தான் தற்போது அதிமுகவிடம் தேமுதிக ஒரு இடத்தை கேட்டுள்ளது. ஆனால் தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுக்க அதிமுக மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
190 கி.மீ...! 1 மணி 50 நிமிடங்கள்..! நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!
தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கடந்த வாரம் எம்.பி சீட் ஒதுக்குவது குறித்து கட்சி நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து பேசுவார்கள் என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் நேற்று இரவு சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தேமுதிகவுக்கு ஒதுக்குவது தொடர்பாக சுதீஷ் ஓ.பி.எஸ்ஸிடம் பேசியதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பாக சுதீஷ் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.