"காங்கிரஸ் பொது சிவில் சட்டத்துக்கு எதிரானது... குஷ்பூ பேட்டி அவரது தனிப்பட்ட கருத்து" - திருநாவுக்கரசர் அதிரடி

Asianet News Tamil  
Published : Nov 01, 2016, 01:46 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
"காங்கிரஸ் பொது சிவில் சட்டத்துக்கு எதிரானது... குஷ்பூ பேட்டி  அவரது  தனிப்பட்ட கருத்து" -  திருநாவுக்கரசர் அதிரடி

சுருக்கம்

புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பேசியது பற்றி கருத்து தெரிவித்த திருநாவுக்கரசர் குஷ்பு பேசியதை தாம் பார்க்கவில்லை, அப்படி பேட்டி அளித்தால் அது தனிப்பட்ட கருத்து.  ஆனால் காங்கிரஸ் கட்சி பொது சிவில் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்தார்

சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னிப்பரிட்சை நிகழ்ச்சியில் பேட்டியளித்த நடிகை குஷ்பூ பாஜக கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேசினார். அது நாட்டுக்கு தேவை என்றார். அதை எதிர்க்கும் முஸ்லீம் சட்டவாரியம், தமிழக அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளை விமர்சனம் செய்தார். 

இந்த விவகாரம் தற்போது புயலை கிளப்பி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருப்பவர் , கட்சியின் கொள்கைக்கு எதிராக பாஜக கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக குஷ்பூ கூறியது பற்றி காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே குஷ்பூக்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று இந்திரா காந்தி நினைவு நாள் தினத்தை ஒட்டி சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் கட்சி பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறது, ஆனால் குஷ்பூ பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறதே என்று கேட்டனர்.

 இதற்கு பதிலளித்து பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது: குஷ்பூ பேட்டி அளித்ததை நான் பார்க்கவில்லை. அப்படி அவர் பேட்டி அளித்திருந்தால் அது அவரது தனிப்பட்ட கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்தல்ல. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவர்ஐ பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறோம். 

இந்தியா பல்வேறு மதங்கள் கொண்ட நாடு. இங்கு பொது சிவில் சட்டம் சாத்தியமில்லாதது. ஜவஹர்லால் முதல் பல பிரதமர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஏன் பாஜகவின் வாஜ்பாயியே ஆட்சி செய்துள்ளார். ஆனால் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் இந்துதுவ அமைப்புகளின் நிர்பந்தத்தால் பிரதமர் மோடி இப்போது பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கிறார்.

இதை காங்கிரஸ் முழுமையாக எதிர்க்கும். இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் பிரணாப் முகர்ஜி.இந்தியா போன்ற வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம்  என்று கூறியுள்ளார். அதனால் தான் சிறுபான்மை மக்கள்  மட்டுமல்ல மற்ற மதத்தினரும் இதை எதிர்க்கின்றனர்.

ஷரியத் சட்டத்துக்கு புறம்பாக பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. இதுதான் காங்கிரசின் நிலைபாடு என்பதை சிறுபான்மை மக்களுக்கு தெரிவித்துகொள்கிறேன். மற்றபடி குஷ்பூ பேட்டி அளித்திருந்தால் அது அவரது தனிப்பட்ட கருத்து ஆகும். இவ்வாறு திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார். அப்போது குஷ்பூ அருகில் சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்.

PREV
click me!

Recommended Stories

Vijay: ஜெயலலிதா வீட்டில் குடியேறும் விஜய்.?! மீண்டும் பரபரப்பாகும் போயஸ்கார்டன்.!
TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?