முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு.. என்ன பேசினார் தெரியுமா?

 
Published : Oct 11, 2017, 03:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு.. என்ன பேசினார் தெரியுமா?

சுருக்கம்

thirumavalavan met chief minister palanisamy

கேரளாவைப் போல தமிழகத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் பழனிசாமியிடம் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முதல்வர் பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கேரளாவைப் போலவே தமிழகத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கிவந்த உதவித்தொகையை தொடர்ந்து வழங்க வலியுறுத்தியதாகவும்  தெரிவித்தார்.

மேலும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடவும் டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

கெயில் குழாய் பதிப்பு விவகாரத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியதாக கூறிய திருமாவளவன், முதல்வருடன் அரசியல் குறித்து பேசிவில்லை எனவும் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..