
தமிழகத்தில் டெங்கு பெரிய சவாலாக நிலவி வரும் நிலையில், டெங்கு குறித்து நடிகர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்
அப்போது,
நாம் நம்மை...நம்மை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்..
தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டு எத்தனையோ உயிர்கள் பலியாகி வருகின்ற சமயத்தில்
டெங்குவை தடுக்க போர் கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
டெங்குவை தடுக்க கொடுக்கப்படும் நிலவேம்பு கசாயம் மட்டுமே போதுமானது கிடையாது.அது ஒரு விதத்தில் முன்னேற்றத்தை கொடுக்கும் அவ்வளவு தான் என குறிப்பிட்டு உள்ளார்
எனவே,அரசை மட்டும் நம்பி இல்லாமல்,நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் விதமாக,நம்மை சுற்றி உள்ள இடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது மட்டுமின்றி,நம் சொந்தங்களை நம் கண் முன்னே இறப்பதை தவிர்க்க, நாம் நம்மை பாக்காப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்
சென்னையில் டிடிவி தினகரனை சந்தித்த பிறகு நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது