பாஜகவுக்கு வயிறு எரியுதா..? #திருமாவை_கொண்டாடுவோம்… டிரெண்டிங்காகும் ஹேஷ்டேக்…

Published : Nov 30, 2021, 08:14 PM IST
பாஜகவுக்கு வயிறு எரியுதா..? #திருமாவை_கொண்டாடுவோம்… டிரெண்டிங்காகும் ஹேஷ்டேக்…

சுருக்கம்

பாஜகவை பிரிச்சு மேயும் அளவுக்கு #திருமாவை_கொண்டாடுவோம் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்காகி இருக்கிறது.

பாஜகவை பிரிச்சு மேயும் அளவுக்கு #திருமாவை_கொண்டாடுவோம் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்காகி இருக்கிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ள டெல்லி சென்றார் விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன். அதற்காக தான் தங்கியிருந்த கட்டிடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார் திருமாவளவன்.

அவர் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தான் இணையவாசிகளின் ஆக சிறந்த கண்டென்ட்டாக இருக்கிறது. தாம் இருந்த கட்டிடத்தில் இருந்து வெளியே உள்ள காருக்கு திருமாவளவன் செல்ல வேண்டும். ஆனால் கட்டிடத்தின் முதல் தளம் முழுக்க… தண்ணீரால் நிரம்பி இருக்க என்ன செய்வது என்று யோசித்திருக்கிறார்.

அதற்குள்ளாகவே கட்சியின் தொண்டர்கள், ஷூ நனைந்திருந்த திருமாவளவன் கால்கள் நனையக் கூடாது என்பதற்காக அவரை அங்கேயிருந்த இரும்புநாற்காலிகள் மீது நடக்க வைத்து… படிப்படியாக கார் வரை கொண்டு சென்றுவிட்டனர்…. அவரும் டெல்லி பறந்து சென்றுவிட்டார்.

திருமாவளவன் டெல்லி சென்றுவிட்டாலும்.. அவரது இந்த ஜம்ப் வீடியோ… இணையத்தில் வைரல் ஆனது… பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து கடுமையான விமர்சனங்களும் வந்துகுவிந்தன. கால்கள் தண்ணீரில் நனைந்தால் என்ன? எளிய மக்களின் தலைவர் என்ற கூற்று எங்கே போனது என்ற கேலிகளும் எழுந்தன.

நாள் முழுக்க திருமாவளவனின் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள், திருமாவளவனின் கடந்தகால போட்டோக்களை வெளியிட்டு அதிரடி காட்டி வருகின்றனர். #திருமாவை_கொண்டாடுவோம் என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் டிரெண்டிங்காக்கி உள்ளனர்.

கோட், சூட் சகிதம் காணப்படும் பல்வேறு போட்டோக்களை பதிவிட்டுள்ள அவர்கள் சிறந்த தலைவர் என்று போற்றி பாடி வருகின்றனர். எப்போதும் உங்களுக்கு எதிராகவே சிலர் இருப்பார்கள், ஆனால் அவர்களினால் உங்களின் வெற்றியை தடுக்கவே முடியாது என்று பேசி மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

எம்பியாக திருமாவளவன் வெற்றி பெற்ற போது பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தன என்று பழைய வரலாறுகளை தூக்கி போட்டு பாஜகவை கிழித்து தள்ளி இருக்கின்றனர்.

மக்களின் மனம்கவர்ந்த தலைவர் என்று போற்றி பாடும் சிறுத்தைகள், சேரிகளில் அவர் சாக்கடையை அள்ளி சுத்தம் செய்யும் வீடியோக்களை போட்டு மற்றவர்களை வாயடைக்க செய்திருக்கின்றனர்.

கடவுளை தூக்கி செல்வது போல… எங்களின் தலைவரை தூக்கி சென்றோம்.. எங்களை பொறுத்துவரை இரண்டும் ஒன்று தான் போட்டோ பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். வேறு சிலரோ… யாரோ கட்டிய வீட்டுக்கு புகுந்தனவல்ல என்றும் அவரை தலைகளில் தூக்கி வைத்து கொண்டாடுவோம் என்றும் அகம் மகிழ்ந்து இருக்கின்றனர்.

இல்லாத இறைவன் பாதத்தை நீங்கள் பூஜிக்கும் போது எங்களை காக்கும் கால்களை நாங்கள் பூஜிப்பது தவறா? என்று கேள்வி கேட்டு விசிகவினர் திணறடித்து வருகின்றனர்.

விசிகவின் வன்னிஅரசும் திருமாவளவன் சாக்கடையை அள்ளி சுத்தம் செய்தது, களப்பணியில் மக்களோடு மக்களாய் நிற்கும் திருமாவளவனின் போட்டோக்களை பகிர்ந்து இருக்கிறார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!