தனித்து விடப்பட்ட பாஜக... நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சி இந்துக்களாலேயே தூக்கி எறியப்படும்.!- திருமாவளவன்

By Ajmal Khan  |  First Published Aug 17, 2023, 2:13 PM IST

பாஜகவிற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் வருகி 31 ஆம் தேதியும், செப்டம்பர் 1ஆம் தேதியும் மும்பையில் நடைபெற இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் 61வது பிறந்தநாள் விழா ஓவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கடந்த ஆண்டு தனது அறுபதாவது பிறந்தநாளில் நாட்டில் சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம் ஜனநாயக சக்திகளை ஐக்கிய படுத்துவோம் என உறுதிமொழி ஏற்றோம்.

Tap to resize

Latest Videos

கடந்த ஓராண்டாக அதற்கான பணிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொண்டர்கள் ஈடுபட்ட நிலையில் தற்போது சனாதன கட்சியான பிஜேபி தனிமையில் உள்ள நிலையில் அதன் எதிர்க்கட்சிகள் 26 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்கிற கூட்டணியுடன் ஒரே அணியுடன் இருப்பதாக தெரிவித்தார். இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட கூட்டம் வருகிற 31ஆம் தேதியும் செப்டம்பர் ஒன்றாம் தேதியும் மும்பையில் நடைபெற இருப்பதாகவும் அங்கு கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்துக்களாலேயே பாஜக ஆட்சி தூக்கி எறியப்படும் என தெரிவித்தார். இந்தியா கூட்டணிக்கு வழிகாட்டக்கூடிய கட்சியாக திமுக இருப்பதாகவும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதாகவும் தெரிவித்தார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சனாதான கட்சிகளை விரட்டி அடிக்கவும் ஜனநாயக கட்சிகளை மையப்படுத்துவோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.
 

click me!