தேசிய கட்சியாக உருவெடுக்கும் விடுதலை சிறுத்தைகள்? நாடாளுமன்ற தேர்தலில் 5 மாநிலங்களில் போட்டி - அசத்தும் திருமா

By Velmurugan s  |  First Published Mar 5, 2024, 7:23 PM IST

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகம் மட்டுமல்லாது தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா என மொத்தமாக 5 மாநிலங்களில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியி்ன் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தென்மாநில நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர். “இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக திமுகவிடம் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை.

மது போதையில் தமிழ் புலிகள் கட்சியினர் சாலையில் அலப்பறை; பொதுமக்களுக்கு இடையூறு செய்து அராஜகம்

Latest Videos

undefined

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தெலங்கானா மாநிலத்தில் 10 தொகுதிகளிலும், கர்நாடகா மாநிலத்தில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் 3 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று ஆந்திரா மாநிலத்தில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

இதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தில் பானை சின்னம் ஒதுக்க கோரிக்கையும் விடுத்துள்ளோம். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற கொள்கையுடன் உறுதியாக உள்ளோம் என்றார்.

வீட்டின் அருகே விளையாடியபோது மாயமான சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக மீட்பு; குழந்தை கடத்தல் கும்பல் கைவரிசை?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தோடு தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதால் விசிக நிச்சயம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. திமுகவோ கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அதே நோக்கோடு தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலையும் கையாண்டது. ஆனால் விசிக சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!