திருப்பூர், திருநெல்வேலி, சென்னை என பிரதமரின் அடுத்தடுத்த தொடர் வருகை தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக தேர்தல் அலுவலத்தில் வேட்பாளர் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் தனித்தனியே சந்தித்து அவர்களிடம் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து கேட்டு, அதனை படிவத்தில் எழுதி வாங்கி வைத்துக் கொண்டார். உடன் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உடனிருந்தார். 2 மணி நேரத்திற்கும் மேலாக நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இன்றைக்கு தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நமது நிர்வாகிகள் கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்களை எங்களது தேர்தல் கமிட்டிக்கு நாளை கூற இருக்கிறோம். அவர்கள் இது தொடர்பாக அறிவிப்பார்கள்.
undefined
கும்பகோணத்தில் ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்டு விசிகவினர் அடாவடி; கடை உரிமையாளர் மீது தாக்குதல்
நேற்று பிரதமரின் சென்னை வருகை, அதற்கு முன்னதாக கடந்த வாரம் திருப்பூர் பல்லடத்தில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா, அதே போல் தூத்துக்குடி, திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சி இவை அனைத்தும் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களின் பேராதரவோடு நடைபெற்று இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. கூடிய விரைவில் தமிழகத்திற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் போதை கலாசாரம் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவி போய் இருக்கிறது. அதில் திமுக முக்கிய நிர்வாகிகள் தொடர்பில் இருக்கிறார்கள். போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் விசிகவில் தொடர்பில் இருக்கிறார்.
இதெல்லாம் நமக்கு அவமானமாக இல்லையா? திமுக, விசிக நிர்வாகிகள் 3500 கோடி ரூபாய் போதை பொருட்களை கடத்தி இருக்கிறார்கள். குற்றவாளிகள் கண்டுபிடித்து விசாரணை நடத்தும் போது இன்னும் எவ்வளவு கடத்தி இருக்கிறார்கள் என தெரியவரும். போதைப் பொருள் தான் கடத்தினார்களா, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டார்களா, ஆயுத கடத்தலில் ஈடுபட்டார்களா, நீக்கப்பட்ட திமுக, விசிக நிர்வாகிகளை பிடித்து விசாரிக்கும் போது பண பரிமாற்றம், வேறு யார் யாருக்கு சென்று இருக்கிறது என்பதெல்லாம் என்சிபி விசாரணையில் தெரியவரும்.
குஜராத் அரசாங்கம் திமுக நிர்வாகி கடத்திய போதை பொருளை பிடித்திருக்கிறார்கள். எய்ம்ஸ் பணி துவங்கி இருக்கிறது, எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமரை எங்கு பார்த்து பேசினார் என தெரியவில்லை. பிரதமர் அனைவரையும் சந்திக்கிறார். தனிப்பட முறையில் கூட இந்த சந்திப்பு இருந்து இருக்கலாம். எனக்கு தெரியாது என முதலிலேயே சொல்லி இருக்கிறேன் என்றார்.