அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணைந்துள்ளதாகவும், எந்தெந்த தொகுதி என்பது அடுத்த கட்ட பேச்சுவார்த்தை முடிவு செய்யப்படும் என புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி.?
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக இறுதி கட்ட பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் அதிமுக தங்கள் கூட்டணியை வலுப்படுத்த அரசியல் கட்சியோடு பேசி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், அன்பழகன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டவரை சந்தித்த கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தேமுதிக அமைக்கவுள்ள தொகுதி பங்கீட்டு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி எந்த எந்த தொகுதி என முடிவு செய்யப்படும் முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார்.
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய தமிழகம்
இதனைத் தொடர்ந்து இன்று வள்ளுவர் கோட்டத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியை, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுக தலைமையிலான கூட்டணியை உறுதி செய்துள்ளோம். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. எந்த தொகுதியில் போட்டியிடுவோம் என்பது குறித்து அடுத்த கட்ட பேச்சு வார்த்தையின் மூலம் இறுதி செய்யப்படும் என்றார்.
எந்த தொகுதியில் போட்டி.?
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையின்படி புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும், பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து வருகிறோம் இந்த கூட்டணி மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்
இந்தியா ஒரு நாடு அல்ல.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக எம்பி ஆ.ராசா.. குவியும் கண்டனங்கள்!