திமுக கூட்டணிக்கு தான் எங்கள் ஆதரவு..! ஸ்டாலினை சந்தித்து அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட எர்ணாவூர் நாராயணன்

By Ajmal Khan  |  First Published Mar 5, 2024, 3:16 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு தெரிவிப்பதாக கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவித்துள்ளார்


திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள்

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் இறுதி செய்து வருகின்றனர. அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தல இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மேலும் முஸ்லிம் லீக் , கொமதேகவிற்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கியுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுகவுடன் பேச்சுவார்த்தையானது நடைபெற்றறு வருகிறது.

Tap to resize

Latest Videos

எர்ணாவூர் நாராயாணன் ஆதரவு

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், மேலும் திமுக தலைமை கேட்டுக்கொண்டால் பிரச்சாரம் செய்ய தயார் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுக கூட்டணியில் எந்த தொகுதியில் புதிய தமிழகம் போட்டி.! வேலுமணியுடன் சந்திப்புக்கு பிறகு கிருஷ்ணசாமி தகவல்

 

click me!