அறிவித்து 10 மாசம் ஆச்சு, அதிகாரிகளே இல்லாத SC/STஆணையம்.. ஸ்டாலின் அரசை அலறவிட்டு திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2022, 2:56 PM IST
Highlights

தமிழ்நாடு எஸ்சி எஸ்டி ஆணையத்திற்கு உரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலுயுறுத்தியுள்ளார். 

தமிழ்நாடு எஸ்சி எஸ்டி ஆணையத்திற்கு உரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலுயுறுத்தியுள்ளார். ஆணையம் அமைத்து 10 மாதங்கள் ஆன பின்பும் பணியாளர்கள் யாரும் இன்னும் நியமிக்கப்படவில்லை ஆனால் இதுவரை ஆணையத்திற்கு சாதி பாகுபாடு தொடர்பாக 1,100 மனுக்கள் வந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருந்து வருகிறது. இது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி என்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மேடைதோறும் முழங்கி வருகின்றனர். இந்நிலையில்தான் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு எஸ்சி -எஸ்டி ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார், அதற்கு பல்வேறு தரப்பினரும் அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துக் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பல ஆண்டுகளாக நாங்கள் வைத்து வரும் இந்த கோரிக்கையை தமிழக முதலமைச்சர் உடலினை பரிசீலித்து இதை அறிவிப்புச் செய்துள்ளார், இந்த ஆணையம் விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், போதுமான பணியாளர்கள் அதிகாரிகளை நியமிக்க வேண்டும், ஆணையத்தின் தலைவராக தகுதியான ஒருவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படியுங்கள்:  நான் எப்போதுமே மோடி ஆதரவாளர் தான்... அதுக்கு ஒரு காரணம் இருக்கு - ஓப்பனாக பேசிய சமந்தா.. வைரலாகும் வீடியோ

இதனையடுத்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்திற்கு தலைவர்கள் உறுப்பினர்களை நியமித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவில் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது,

அந்த வகையில் மாநில அளவில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம் என்ற புதிய அமைப்பு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் என அறிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:  யூடியூப் சேனல்களை முடக்க துடிப்பது கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால்.. தீர்ப்பை கண்டித்த தடா ரஹூம்.

இந்நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார், அதில், தமிழ்நாடு எஸ்சி -எஸ்டி ஆணையத்திற்கு உரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், ஆணையம் வீரியத்துடன் இயங்குவதற்கு ஏற்ற போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.எஸ்சி எஸ்டி ஆணையம் அமைக்கப்பட்டு பத்து மாதங்கள் ஆன பின்பும் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை, இன்னும் அணையத்திற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் 6 அதிகாரிகளே ஆணையத்தின் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார்கள், இதுவரை ஆணையத்திற்கு சாதிப்பாகுபாடு தொடர்பாக 1100 மனுக்கள் வந்துள்ளன என்று தனியார் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியை டேக் செய்து தமிழக முதலமைச்சருக்கு திருமாவளவன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

 

தமிழ்நாடு எஸ்சி.எஸ்டி ஆணையத்திற்குரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டுமாறு மாண்புமிகு அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன், ஆணையம் வீரியத்துடன் இயங்குவதற்கேற்ப
போதிய நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமாறும்
கேட்டுக் கொள்கிறோம். pic.twitter.com/4S72lf9XnZ

— Thol. Thirumavalavan (@thirumaofficial)

இந்நிலையில், திருமாவளவனின் டுவிட்டரை டேக் செயது பலரும் பல வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர், ட்விட்டரில் மட்டுமே போராட்டம் செய்தால் போதுமா வீதியில் இறங்கி போராட்டம் செய்யக்கூடாதா, இதே அதிமுக நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் இப்படித்தான் அய்யாசாமி என்று அடிமை போல கெஞ்சுவீர்களா  இதுவே திராவிட மாடல், என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார். 
 

click me!