5 கொலை, பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளரை கைது பண்ற அளவுக்கு துணிச்சலா.? போலீசை நக்கல் அடித்த சவுக்கு சங்கர்.

Published : Sep 02, 2022, 01:47 PM ISTUpdated : Sep 02, 2022, 01:53 PM IST
 5 கொலை, பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளரை கைது பண்ற அளவுக்கு துணிச்சலா.? போலீசை நக்கல் அடித்த சவுக்கு சங்கர்.

சுருக்கம்

பிஜேபி பட்டியல் அணி மாநில பொருளாளர் பிபிஜிடி சங்கர் அவர்களை கைது பண்ற அளவுக்கு தமிழக போலீசுக்கு துணிச்சல் வந்துவிட்டதா என ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். வெறும் 5கொலைகள் தானே பிபிஜிடி சங்கர் பண்ணியிருக்கான், இது என்ன பெரிய குற்றமா? என்றும் அவர் நக்கலடித்துள்ளார்.

பிஜேபி பட்டியல் அணி மாநில பொருளாளர் பிபிஜிடி சங்கர் அவர்களை கைது பண்ற அளவுக்கு தமிழக போலீசுக்கு துணிச்சல் வந்துவிட்டதா என ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். வெறும் 5கொலைகள் தானே பிபிஜிடி சங்கர் பண்ணியிருக்கான், இது என்ன பெரிய குற்றமா? என்றும் அவர் நக்கலடித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜகவை நிலை நிறுத்துவதற்கான பல முயற்சிகளில் அக்காட்சியை ஈடுபட்டு வருகிறது, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கு என தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எல். முருகன், அண்ணாமலை ஆகியோர் அக்கட்சியின் மாநிலத் தலைவராக பதவியேற்றதும் முதல், பல குற்றப்பின்னணி உள்ளவர்கள் கட்சியில் இணைக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் பாஜகவில் இணைந்தவர்தான் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர், வளர்புரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பிபிஜிடி சங்கர்.

இதையும் படியுங்கள்: அதிமுக பொதுக்குழு.. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது ஏன்? 127 பக்க தீர்ப்பு வெளியானது..!

இவர் அதிமுக ஆட்சி காலத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் ஆவார், பல்வேறு கொலை, ஆட்கடத்தல், கொலை முயற்சி, சொத்து அபகரிப்பு புகார்கள் இவர் மீது இருந்து வருகிறது, அதிமுகவினரால் படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி பிபிஜி குமாரின் வலதுகரமாக இருந்தவர்தான் இவர், தற்போது பாஜக மாநில பட்டியல் அணி பொருளாளராகவும், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இருங்காட்டுக்கோட்டையில் பதுங்கியிருந்த சுரேஷ், ஞானப்பிரகாசம், அன்பரசன், நாகராஜ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படியுங்கள்: அடித்தும், கெட்ட வார்த்தையால் திட்டியும் பாலியல் தொந்தரவு.. அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியர் கைது

அவர்களிடம்  அரிவாள், நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது, அவர்கள் நடத்திய விசாரணையில் தாங்கள் பிபிஜிடி சங்கரிடம் இருந்தவர்கள் என்றும், குட்டி தாதா ரவுடி விஜய் தலைமையில் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும் கூறினார். இதில் விஜய்க்கும் பிபிஜிடி சங்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சங்கரை போட்டுத் தள்ள  பயிற்சி எடுத்து வந்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்,  இதைக் கேள்விப்பட்ட பிபிஜிடி ஷங்கர் குட்டி தாத்தா விஜய்யின் நண்பன் ராஜ்கிரன் என்பவரை போனில் அழைத்து, என்னைய கொலை செய்ய திட்டம் போடுகிறீர்களா என கூறி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாஜக பிரமுகர் ரவுடி சங்கர் மீது போலீசார் கொலை மிரட்டல் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து  தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில்தான் பிபிஜி டி சங்கர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில்தான் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிஜேபி பட்டியல் அணியோட மாநில  பொருளாளரையே கைது பண்ற அளவுக்கு துணிச்சல் வந்திருச்சா? @tnpoliceoffi, 5  கொலை தானேய்யா பண்ணியிருக்கான் PPGDசங்கர், இது என்ன பெரிய குற்றமா? என்னன்னு கேளுங்க ஜி @annamalai_k என பதிவிட்டுள்ளார். சவுக்கு சங்கரின் இந்த டுவிட்டர் போலீசையிம், அதே நேரத்தில் அண்ணாமலையையும் நக்கல் அடிப்பது போல் உள்ளதால் இதற்கு பலரும் பலவகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

ஏற்கனவே காஞ்சிபுரம் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறித்த சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த படப்பை குணாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், பாஜக பிரமுகர், ரவுடி பிபிஜிடி சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய காவல்துறை களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!