பாஜக ஆட்சி நிலைக்காது..ஜனநாயகமா இது? ஏக்நாத் ஷிண்டே அரசை கடுமையாக தாக்கிய மம்தா பானர்ஜி

Published : Jul 04, 2022, 08:46 PM IST
பாஜக ஆட்சி நிலைக்காது..ஜனநாயகமா இது? ஏக்நாத் ஷிண்டே அரசை கடுமையாக தாக்கிய மம்தா பானர்ஜி

சுருக்கம்

மகாராஷ்டிராவில் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. 

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

சிவசேனா அதிருப்தி அணியின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் இணைந்து புதிய அரசை அமைத்தார். இதனைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.  இதைத் தொடர்ந்து பேரவையில் 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர்உத்தரவிட்டார். 

அதன்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.  சபாநாயகர் ராகுல் நர்வேகர் முன்னிலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 164க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !

உத்தவ் தாக்ரே

இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தரப்பு எம்எல்ஏவான சந்தோஷ் பங்கார் முதலமைச்சர் ஷிண்டே தரப்பு ஆதரவு எம்எல்ஏவாக சேர்ந்து கொண்டார். இதையடுத்து உத்தவ் தாக்ரே தரப்பு மேலும் பலவீனம் அடைந்துள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த இந்த ஆட்சி மாற்றம் குறித்து காங்கிரஸ் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்

மம்தா பானர்ஜி

இந்நிலையில் கொல்கத்தாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, ‘இந்த அரசாங்கம் தொடராது என்று நான் நம்புகிறேன். இது ஒரு நெறிமுறையற்ற ஜனநாயகமற்ற அரசாங்கம். அவர்கள் அரசாங்கத்தை வென்றிருக்கலாம், ஆனால் மராட்டிய மக்களின் இதயத்தை வெல்லவில்லை. பாஜக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான இந்த ஆட்சி நிலைக்காது. அரசு விரைவில் கவிழும். மராட்டிய சிவசேனா கிளர்ச்சி எம்எல்ஏக்களுக்கு அசாமில் பாஜக பணம் மற்றும் பிற பொருட்களை வழங்கியது’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு.. கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலையா? எ.வ வேலு காலேஜ்ல வைங்க பார்க்கலாம் - எச்.ராஜா கொந்தளிப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!