கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய அதிமுகவுக்கு ஆர்வம் இல்லை என்றும் வழக்கை முடிப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய அதிமுகவுக்கு ஆர்வம் இல்லை என்றும் வழக்கை முடிப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக இருந்தது. எதோ ஒரு நோக்கத்தோடு அதிமுக பொதுக்குழுவில் ஆட்கள் திரட்டப்பட்டிருந்தனர். நிர்வாகிகளுக்கு பின்னால் அமர வைக்கப்பட்டிருந்த சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை நாகூசும் வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தனர். பொதுக்குழுவில் திட்டமிட்டு திரைக்கதை எழுதி ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நேரடி ஒளிபரப்பு செய்தது திட்டமிட்ட ஒன்று. ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்ட போது மேடையில் இருந்த எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் இருந்தது ஏன்?
இதையும் படிங்க: கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலையா? எ.வ வேலு காலேஜ்ல வைங்க பார்க்கலாம் - எச்.ராஜா கொந்தளிப்பு
கூச்சலிட்ட கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கண்டிக்கவில்லை. அதிமுக தலைமைப்பதவியை எப்படியாவது கைப்பற்றிட வேண்டும் என்று திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் நாகரிகமற்றது. அதிமுகவின் தலைமையை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, நிர்வாகிகள் அல்ல. யாருடைய சுயநலம் அதிமுகவின் பிளவுக்கு காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இரட்டை தலைமை மக்களால் ஏற்கப்பட்டது. அதிமுகவை ஓபிஎஸ் - ஈபிஎஸ் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளது. 2 பேரும் ஒற்றுமையாக கட்சியை கொண்டு சென்றிருந்தால், அதிக வெற்றி பெற்றிருக்க முடியும்.
இதையும் படிங்க: பாஜக போன்ற மத வெறியர்களுக்கு இந்த தீர்ப்பு செருப்படி..பாஜவை விளாசித் தள்ளிய அமைச்சர் மனோ தங்கராஜ்!
யாருடைய சுயநலம் அதிமுகவின் பிளவுக்கு காரணம் என்பது அனைவருக்கு தெரியும். நில அபகரிப்பு போல அதிமுக தலைமை பதவி அபகரிக்கப்படுகிறது. தொண்டர்களை விலை கொடுத்து வாங்கிவிடலாம் என ஈபிஎஸ் தரப்பு நினைக்கிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன்? முதலமைச்சராக 4 ஆண்டுகள் இருந்த பழனிசாமி கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய போதிய அக்கறை காட்டவில்லை. கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என தற்போதைய திமுக அரசுக்கு அதிமுக அழுத்தம் கொடுக்காதது ஏன்? அதிமுக ஆட்சியில் கோடநாடு வழக்கை முடிப்பதில் மட்டுமே கவனம். உண்மை குற்றவாளியை கண்டறிய ஆர்வம் இல்லை என்று தெரிவித்தார்.