இனி தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

Published : Jul 11, 2021, 10:57 AM IST
இனி தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

சுருக்கம்

அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கான மாரத்தான் போட்டிகள் மறுக்கப்பட்டன. வரும் காலங்களில் மாரத்தான் போட்டிகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும். இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் திமுக சார்பில் பல மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்களையே நோய் தாக்குகிறது. வரும் காலங்களில் மாரத்தான் போட்டிகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

கொரோனாவுக்கு பிறகு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி முக்கியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 'ஓடலாம் நோயின்றி வாழலாம்' என்ற தலைப்பில் லண்டனில் நடைபெறும் விர்ச்சுவல் சேலஞ்ச் மாரத்தானில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இன்று அதிகாலையிலே கிண்டி லேபர் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவர் 21 கி.மீ ஓடி சென்று மெரினா கடற்கரையில் நிறைவு செய்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கான மாரத்தான் போட்டிகள் மறுக்கப்பட்டன. வரும் காலங்களில் மாரத்தான் போட்டிகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும். இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் திமுக சார்பில் பல மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும்.

டெங்குவின் தொடர்ச்சி தான் ஜிகா வைரஸ். ஜிகா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்களையே நோய் தாக்குகிறது. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீக்குவதற்கு நேற்றிரவு 5 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன. இதனால் தமிழகத்தில் இனி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு வராது எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!